விக்ரம் படத்தில் பல கோடி ரூபாய் சம்பளம்… சூர்யாவை பற்றி இரா.பார்த்திபன் பேச்சு

உலகின் முதல் நான் லீனியர் சிங்கிள் ஷாட் பிலிம் இரவின் நிழல். 99 நிமிட இப்படத்தை இரா.பார்த்திபன் அவர்கள் இயக்கி நடித்து சாதனை படைத்துள்ளர். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா ஏ.ஆர்.ரகுமானின் இசை பயணத்தை கொண்டாடும் வகையில் நேற்று சென்னையில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது.

பல திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சியில் பார்த்திபன் அவர்கள் மேடையில் பேசியபோது, திரையில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் “விக்ரம்” திரைப்படத்திற்கு வாழ்த்துக்கள் என தன பேச்சை துவங்கிய அவர் இந்நிகழ்ச்சி பல சிரமங்களை கடந்து நடந்துக் கொண்டிருக்கிறது. எனது திரையுலக நண்பர்கள் பலரை நான் அழைக்கும் போது பல கசப்பான அனுபவங்கள் கிடைத்தது. “விக்ரம் படத்தில் சூர்யா கூட கோடி கணக்கில் சம்பளம் வாங்கியதால் தான் சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பார்”. ஆனால் இங்கு வந்திருக்கும் அனைத்து பிரபலங்களும் என் மீது கொண்ட அன்பால் எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் வருகை தந்துள்ளனர் என்றார்.

இது ஒரு புறம் இருக்க, வலைத்தளம் முழுவதும் இரண்டு நாட்களாக “விக்ரம் படத்தில் உலகநாயகன் கமல் ஹாசன் மீதுள்ள அன்பின் காரணமாக நடிகர் சூர்யா சம்பளம் இல்லாமல் தான் நடித்தார்” என்று செய்திகள் வந்துள்ள நிலையில் இரா.பார்த்திபன் அவர்கள் இப்படி பேசியது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *