ட்ரோன்ஸ் – திரை விமர்சனம் 3. 5/5
தொழில்நுட்பமும் மாயமும் கைகோர்க்கும் வித்தியாசமான அனுபவம்! சினிமாவில் பேய் என்றாலே இருட்டு, அலறல், திடீர் அதிர்ச்சி எனப் பழகிப்போன வழக்கத்திலிருந்து விலகி, கற்பனைக்கும் நகைச்சுவைக்கும் மர்மத்துக்கும் இடமளித்திருக்கிறது ட்ரோன்ஸ் திரைப்படம். கதையைச் சொல்லும் விதத்தில் இருக்கும் புதுமையே இப்படத்தின் முக்கியமான பலம். அறிவியல் சார்ந்த சிந்தனைகளையும் இயற்கைக்கு அப்பாற்பட்ட நிகழ்வுகளையும் ஒரே திரைக்கதைக்குள் இணைக்க முயன்றிருக்கும் இயக்குநர் ராகவ் மிர்தாத், வழக்கமான பேய்ப் பட அனுபவத்திலிருந்து ரசிகர்களை வேறொரு உலகத்துக்கு அழைத்துச் செல்கிறார். கல்லூரியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட…

