கற்றுக்கொள்ளுங்கள் கமலிடம் ; உச்ச நட்சத்திர நடிகர்களுக்கு “விக்ரம்” படம் தந்த பாடம் ;

கடந்த ஜூன் 3ம் தேதி உலகநாயகன் கமல் ஹாசன், விஜய் சேதுபதி, பஹத் பாசில் மற்றும் சூர்யாவின் நடிப்பில், லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் வெளியான படம் “விக்ரம்”.

இப்படத்தின் அறிவிப்பு முதலே எதிர்பார்ப்புகளை உச்சத்தில் வைத்தது படக்குழு. ஆனால் ரசிகர்களின் எதிர்பார்ப்பை மிஞ்சிய அளவிற்கே படம் இருந்தது.

இப்படத்தின் வசூல் வெறும் இரண்டே நாட்களில் ரூபாய் 100 கோடியை கடந்து சாதனை படைத்துள்ளது.

ஆனால், சமீபத்தில் ரஜினியின் நடிப்பில் தீபாவளியின் போது வெளிவந்த “அண்ணாத்த” திரைப்படம் 3 நாட்களுக்கு பிறகே 100 கோடி ரூபாய் வசூலை ஈட்டியது.

பண்டிகை காலத்தில் வந்த திரைப்படம் கூட 100 கோடி ரூபாய் வசூலை தொடுவதற்கு 3நாட்கள் ஆனது. ஆனால், சாதாரண தினத்தில் வெளியான “விக்ரம்” திரைப்படம் 2 நாட்களில் 100 கோடி வசூல் செய்ததற்கு உலகநாயகன் கமல் ஹாசன் செய்த படத்தின் ப்ரோமஷனே மிக முக்கிய காரணம் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

விக்ரம் படம் சாதாரண தினத்தில் வெளியாகி 100 கோடி வசூல் செய்ததன் காரணம் :

சமீபத்தில் பான் இந்தியா முத்திரையுடன் வெளியான அண்ணாத்த, பீஸ்ட் போன்ற தமிழ் படங்களும். புஷ்பா, ஆர் ஆர் ஆர் மற்றும் கே.ஜி.எஃப் – 2 போன்ற மற்ற மொழியில் எடுத்து தமிழில் டப்பிங் செய்யப்பட்டு பான் இந்தியா முத்திரையுடன் வெளியான அனைத்து படங்களும் 100 கோடி முதல் 1000 கோடி வரையேயான வசூல் செய்ததை நாம் அனைவரும் அறிந்திருப்போம்.

என்னதான் வசூல் செய்தாலும் அதற்கு காரணம் படத்தின் ப்ரொமோஷன்ஸ் தான். ஒரு பான் இந்தியா படத்திற்கும் சரி, உலக நாடு முழுவதும் வெளியாகும் படத்திற்கும் சரி எப்படிப்பட்ட விளம்பரத்தை செய்ய வேண்டும் என்று புஷ்பா, ஆர் ஆர் ஆர் மற்றும் கே.ஜி.எஃப் – 2 படத்தின் ப்ரொமோஷன்கள் மிக முக்கிய எடுத்துகாட்டு என்று சினிமா வட்டாரங்களில் அனைவரும் பேசிக்கொண்டிருக்கும் வேளையில்,

அதைவிட அதிகப்படியான விளம்பரத்தையும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி வெறும் இரண்டே நாளில் 100 கோடி வசூலை கடந்த படம் தான் தமிழில் எடுக்கப்பட்டு பான் இந்தியா படம் என ரிலீஸ் செய்யப்பட்ட விக்ரம் திரைப்படம். கோலிவுட்டில் இந்த ஆண்டின் அதிக வசூலில் இடம் பெற போகும் வெற்றி படம் இது ஒன்று மட்டுமே என்று சொல்லக் கூடிய அளவிற்கு படமும் படத்தின் விளம்பரத்தையும் செய்தார் உலக நாயகன் கமல்.

பிற மாநில நடிகர்கள் வாங்கும் சம்பளத்திற்கு படத்தின் ரிலீஸ் தேதி வரை இந்தியாவில் பல மாநிலங்களுக்கு சென்று பிரஸ் மீட் செய்தும் ப்ரீ ரிலீஸ் ஈவென்ட் நடத்தியதையும் நம் தளத்திலே பதிவு செய்துள்ளோம்.

ஆனால், நடிகர் விஜய்யோ, எனக்கு 100 கோடி ரூபாய் சம்பளமும் வேண்டும் படத்தின் கதைக்கு ஏற்றவாறு நான் நடிக்க போவதில்லை எனக்கு ஏற்றவாறு கதையை இயக்குனர் மாற்றியமைக்கட்டும். படம் எப்படி இருந்தாலும் என்னை வைத்து படம் எடுத்தால் அது லாபகரமான படமாக தான் இருக்கும். அதனால் ப்ரொமோஷனுக்கு 1 மணி நேர பேட்டி மட்டும் மக்களுக்கு போதும். ஊடகம் மற்றும் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடத்த வேண்டாம் என்ற மிதப்புடன் வளம் வருவது மட்டுமல்லாமல் அவரை வைத்து படம் இயக்கிய இயக்குனரை தொலைபேசி மூலம் ரஜினிக்கு அழைப்பு விடுத்து நெல்சன் நல்ல இயக்குனர் தான் என்னால் தான் சிறு தவறு நடந்து விட்டது என ரெகமண்ட் செய்துள்ளார்.

சரி, அடுத்தது நடிகர் ரஜினியும் தொடர் தோல்விப் படங்களை மட்டுமே கொடுத்து வருகிறார். அதற்கு என்ன தான் காரணம் என்று தெரியவில்லை. “காலா”வதியான கதையில் செண்டிமெண்ட் வைத்து தான் அவருக்கு சமீபத்திய கதைகள் அமைகிறது.

முன்னதாக நேரு ஸ்டேடியம், சாய் ராம் இன்ஜினியரிங் காலேஜ் என பிரம்மாண்டமாக ஆடியோ லான்ச் மட்டுமாவது நடத்தி வந்த இவர்களும் சமீபத்தில் வெளியான படங்களுக்கு எவ்வித ப்ரொமோஷனுக்கும் தலை காட்டவில்லை.

இவர்கள் தலை காட்டவில்லை என்று வருத்தப்படும் வேளையில், நடிகர் அஜித் அவர் விரும்பிய கதையை இயக்குனரிடம் எடுக்கச் சொல்லி வலிமையான படத்தை படுதோல்வி அடைய செய்துவிட்டார் என்று சினிமா வட்டாரங்கள் தெரிவித்தன. இப்போதெல்லாம் ஒப்பந்தம் செய்யும் போதே நான் எந்த ப்ரோமோஷனுக்கும் வரப்போவதில்லை என்றே ஒப்பந்தம் செய்கிறாராம்.

இவர்கள் எல்லாம் எப்போது வாங்கும் 100 கோடிக்கு 60 நாள் படப்பிடிப்பிற்கு மட்டும் செல்லாமல், ப்ரொமோஷனுக்கு தீவிரமாக இல்லாவிட்டாலும் ஓரளவாவது ஒத்துழைக்கிறார்களோ அப்போது தான் தமிழ் சினிமா மீண்டும் தலை தூக்கும் என்பது சினிமா வட்டாரத்திலுள்ள பலரின் கருத்தும் இளஞ்சூரியனின் கருத்தும்.

பல இயக்குனர்கள் வலுவான கதைகளை வைத்துள்ளனர். அதற்கேற்றவாறு நடிப்பதே நடிகனின் வேலை. அப்படி ஏதேனும் மாற்றமிருந்தால் இயக்குனர்களுடன் ஆலோசனை செய்யலாமே தவிர அவர்களை கட்டாயப்படுத்துவது சில நேரங்களில் ஆரோக்கியமான படைப்புகளை கொடுத்தாலும் பல நேரம் சொதப்பலாகவே முடிந்துள்ளது. இதையெல்லாம் தக்க ஆலோசனையுடனும் திட்டத்துடனும் நீங்கள் செய்தால் தமிழ் சினிமா உலக சினிமாவாக மாறுவதற்கு வெகு தூரம் இல்லை என்பதே நிதர்சனமான உண்மை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *