தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைப்பாரா அருள்நிதி? கதவை திறக்குமா D-பிளாக்

வம்சம் படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானவர் தான் அருள்நிதி. 2010 ஆம் ஆண்டு முதல் இது வரை வருடத்திற்கு அதிகபட்சம் ஒன்று அல்லது இரண்டு படங்களில் மட்டுமே நடித்து வந்தார். தற்போது 2022 ஆம் ஆண்டு தொடர்ச்சியாக இவரின் மூன்று படங்கள் வெளியாகவுள்ளது D – பிளாக், தேஜாவு, டைரி என அடுத்தடுத்து வெளியாகவிருக்கும் படங்களில் D என்ற வார்த்தையில் ஆரம்பிக்கும் தலைப்புகளிலேயே வைத்துள்ளர்.

அதில் ஜூலை 1ஆம் தேதி வெளியாகவுள்ளது D – பிளாக் திரைப்படம். டிமாண்டி காலனி படத்திற்கு பிறகு இரவுக்கு ஆயிரம் கண்கள் என்ற படம் மட்டுமே ஓரளவுக்கு பாராட்டை பெற்ற படமாக அமைந்தது.

அதற்கு இடையில் வெளியான நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும், ஆறாது சினம், பிருந்தாவனம், களத்தில் சந்திப்போம் ஆகிய படங்கள் தொடர் தோல்வியை சந்தித்தது. இதன் காரணமாக கூட டிமாண்டி காலனி படம் D என்ற எழுத்தில் பெயரிட்டதால் வெற்றி பெற்றிருக்கலாம் என்று நினைத்து அவர் நடிக்கும் படங்களுக்கும் அதே எழுத்தில் பெயர் வைத்துள்ளாரா என்பது அவருக்கு தான் வெளிச்சம்.

எனவே, தொடர் தோல்விகளை கொடுத்த அருள்நிதிக்கு D – பிளாக் திரைப்படம் வெற்றி படமாக அமையுமா? என்ற கேள்விக்கு காத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *