விஜய் – அஜித் – நயன்தாராவை இயக்கும் கௌதம் மேனன்

வருகிற ஜூன் 9ஆம் தேதி திரையுலகத்தில் மிக பிரபலமான விக்னேஷ் சிவன் நயன்தாரா ஜோடிக்கு மஹாபலிபுரத்திலுள்ள நட்சத்திர ஹோட்டலில் திருமணம் நடைபெறவுள்ளது. இவர்களின் திருமண நிகழ்வை NETFLIXல் வெளியிட போவதாக தகவல்கள் சில தினங்களாக உலா வருகிறது. மேலும் இதை தொடர்ந்து இவர்களின் கல்யாணத்தை ஓடிடி தளத்தில் வெளியிடுவதால் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் அவர்களின் கல்யாண நிகழ்வு முழுவதையும் இயக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகவுள்ளது.

மேலும் இவர்களின் திருமணத்திற்கு பல பிரபலங்கள் வருகை தரவிருக்கும் நிலையில் அஜித் மற்றும் விஜய் இருவரும் வருவார்கள் என ரசிகர்கள் பலரால் எதிர்பார்க்கப் படுகிறது. அப்படி அவர்கள் வருகை தரும் நிலையில் அவர்கள் இருவரையும் கல்யாண மேடையில் இயக்கப்போவது கௌதம் மேனனாக தான் இருக்கும் என்று தகவல்கள் வந்தவண்ணமுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *