LSG vs GT போட்டி சுருக்கம் : தொடர்ந்து 4வது முறையாக சேசிங் செய்த அணி வெற்றி ;

IPL போட்டி 4:

டாடா 2022ம் ஆண்டுக்கான IPLன் நான்காவது போட்டியை இன்று குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி மோதியது..

குஜராத் அணியின் புதிய கேப்டன் ஹர்திக் பாண்டியா டாஸை வென்று பௌலிங் தேர்வுசெய்தார்.

இதனை அடுத்து, லக்னோ கேப்டன் கே எல் ராகுல் தலைமையிலான அணி பேட்டிங் செய்ய துவங்கியது.

இரண்டு அணிக்காக இன்று விளையாடும் வீரர்கள் :

லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் : கே எல் ராகுல்(C), குயின்டன் டி காக்(WK), எவின் லீவிஸ், மனிஷ் பாண்டே, தீபக் ஹூடா, க்ருனால் பாண்டியா, மொஹ்சின் கான், ஆயுஷ் படோனி, துஷ்மந்தா சமீரா, ரவி பிஷ்ணோய், அவேஷ் கான்.

குஜராத் டைட்டன்ஸ் : ஹர்திக் பாண்டியா(C), சுப்மன் கில், மேத்யூ வேட்(WK), விஜய் ஷங்கர், அபினவ் மனோஹர், டேவிட் மில்லர், ராகுல் திவாட்டியா, ரஷீத் கான், லாக்கி பெர்குசன், வருண் ஆரோன், மொஹமத் ஷமி.

ஆட்டத்தின் முதல் பாதி;

லக்னோ அணியின் கேப்டன் கே எல் ராகுல்(0) முதல் பந்திலே அவுட் ஆனார். குயின்டன் டி காக்(7), எவின் லீவிஸ்(10), மனிஷ் பாண்டே(6) என டக்கென்று ஆட்டமிழக்க.

தீபக் ஹூடா(55), ஆயுஷ் படோனி(54) என அதிரடி ஆட்டம் ஆடி ரன்களை குவித்தனர். க்ருனால் பாண்டியா(21*), துஷ்மந்தா சமீரா(1*) அடிக்க 20 ஓவர் இறுதியில் 6 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்களை சேர்த்தனர்.

பந்து வீச்சில்,                                 O – R – W

மொஹமத் ஷமி                                4 – 25 – 3
ரஷீத் கான்                                           4 – 27 – 1
லாக்கி பெர்குசன்                            4 – 24 – 0
வருண் ஆரோன்                               4 – 45 – 2
ஹர்திக் பாண்டியா                        4 – 37 -0

இரண்டாம் பாதி :

159 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கிய குஜராத் அணியின் சுப்மன் கில் எதிர்பாராத விதமாக (0) ரன்கள் ஏதுமின்றி ஆட்டமிழந்தார்.

கேப்டனாக தக்க பொறுப்புடன் விளையாடி ஹர்திக் பாண்டியா(33) ரன்களை விளாசினார், மேத்யூ வேட்(30), விஜய் ஷங்கர்(4), அபினவ் மனோஹர்(15), டேவிட் மில்லர்(30), ராகுல் திவேதியா(40) ஆட்டத்தை மாற்றியமைது அணியின் வெற்றியை உறுதிசெய்தார்.

19.4 ஓவர்களில் 5 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் அணி அசத்தல் வெற்றி.

பந்து வீச்சில்,                             O – R – W

தீபக் ஹூடா                                    3 – 31 – 1
க்ருனால் பாண்டியா                    4 – 17 – 1
மொஹ்சின் கான்                          2 – 18 – 0
துஷ்மந்தா சமீரா                           3 – 22 – 2
ரவி பிஷ்ணோய்                             4 – 34 – 0
அவேஷ் கான்                                3.4 – 33 – 1

இந்த போட்டியின் சாதனைகள்;

IPL 2022ன் மூலம் 10 வருடங்கள் கழித்து IPL போட்டியில் விளையாடுகிறார் மேத்யூ வேட்.
இந்த போட்டியில் அதிவேக பந்து வீச்சாளர் லாக்கி பெர்குசன் 150.4kmph வேகம்.
தனது IPL அறிமுக ஆட்டத்தில் ஸ்வைப்னில் அஸ்னோட்கருக்கு பிறகு அரைசதம் அடித்த இந்திய வீரர் ஆயுஷ் படோனி(54).
இந்த சீனில் தொடர்ந்து 4வது முறையாக சேசிங் செய்த அணி வெற்றிபெற்றது.
முதல் முறையாக பாண்டியா பிரதர்ஸ் எதிர் எதிர் அணியில் IPL போட்டியில் காலம் கண்டனர்.
IPL 2022ன் இரண்டு புதிய அணிகள் இன்று மோதியது.
ஹர்திக் பாண்டியா கேப்டனாக தனது முதல் வெற்றியை ஈட்டியிருக்குறார்.

சிறந்த ஆட்டக்காரர் விருதை மொஹமத் ஷமி பெற்றார்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *