MI vs DC போட்டி சுருக்கம் : 10வது ஆண்டாக சாதனையை கடைபிடித்த மும்பை இண்டியன்ஸ்

போட்டி 2:

டாடா IPL 2022 இரண்டாவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணி மோதியது.

டாஸ்:

டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் டாஸ்க்காக காயினை சுழற்றினார். மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா டாஸை தழுவவிட்டார். டாஸை வென்ற ரிஷப் பண்ட் முதலில் பௌலிங்கை தேர்வுசெய்தார்.

இரு அணிக்காக விளையாடும் வீரர்கள்:

மும்பை இண்டியன்ஸ் : ரோஹித் சர்மா(C), இஷான் கிஷன்(WK), திலக் வர்மா, அன்மோல்ப்ரீத் சிங், கைரன் பொல்லார்ட், டிம் டேவிட், டேனியல் சாம்ஸ், முருகன் அஸ்வின், டைமல் மில்ஸ், ஜஸ்பிரீத் பும்ரா, பசில் தம்பி.

டெல்லி கேபிட்டல்ஸ்: ப்ரித்வி ஷா, டிம் ஸைபர்ட், மந்தீப் சிங், ரிஷப் பண்ட்(C/WK), ரோவ்மன் பௌல், லலித் யாதவ், அக்சர் படேல், ஷரதுல் தாகூர், கலீல் அஹ்மத், குலதீப் யாதவ், கமலேஷ் நாகர்கோட்டி.

https://ilanchoorian.com/csk-vs-kkr-match/

 

முதலாவதாக பேட்டிங் செய்த மும்பை அணி:

முதலாவதாக களமிறங்கிய ரோஹித் சர்மா(41) & இஷான் கிஷன்(81) ஆட்டத்தை அமர்களமாகவும் அதிரடியாகவும் துவங்கினர்.67 ரன்களுக்கு முதல் விக்கெட் வீழ்ந்த பின்.திலக் வர்மா(22) மும்பைக்காக முதல் போட்டியில் இவர் விளையாடினர் என்பது தெரியாத படி ஆட்டத்தை சிறப்பாக கொண்டு சென்றார். அன்மோல்ப்ரீத் சிங்(8), கைரன் பொல்லார்ட்(3) ஏமாற்றமளித்தார்.

டிம் டேவிட்(12), டேனியல் சாம்ஸ்(7) ரன்கள் அடிக்க 20 ஓவரில் 177 ரன்கள் குவித்தது மும்பை இண்டியன்ஸ் அணி.

முதல் 6 ஓவர்களில் அதிக உத்வேகத்துடன் பேட்டிங் செய்த மும்பை அணியின் வேகத்தை அடுத்தடுத்து விக்கெட்டுகளை எடுத்து குலதீப் யாதவ் குறைத்தார்.

பந்து வீச்சில்,                   O – R – W

ஷரதுல் தாகூர்                 4 – 47 – 0
லலித் யாதவ்                     2 -15 – 0
அக்சர் படேல்                   4 – 40 – 0
கலீல் அஹ்மத்                 4 – 27 – 2
குலதீப் யாதவ்                 4 – 18 – 3
நாகர்கோட்டி                  2 – 29 – 0

குலதீப் யாதவின் சுழல் :

2020ம் ஆண்டு கொல்கத்தா அணிக்காக 5.80 கோடி ரூபாய் விலைக்கு இவர் விளையாடினார். அந்த சீசனில் இவர் சரிவர விளையாடாத காரணத்தால் இவரை ஏலத்திற்கு விட்டது கொல்கத்தா அணி.

2021ம் ஆண்டு தொடக்க விலையான ரூபாய் 20 லட்சத்துக்கு ராஜஸ்தான் அணி குலதீப்பை வாங்கியது. ஆனால், சென்ற ஆண்டு இவர் எந்த போட்டியிலும் விளையாட வில்லை.

இதை தொடர்ந்து இந்த ஆண்டு மெகா ஏலத்தில் இவரை ரூபாய் 2 கோடிக்கு டெல்லி அணி இவரை தேர்வு செய்தது.

தேர்வு செய்த அணியின் நம்பிக்கையை காப்பாற்றும் விதமாக இன்றைய தினம் அவரின் சுழல் இருந்தது.

இஷான் கிஷனின் விளாசல்:

2018ம் ஆண்டு முதல் IPL தொடரில் மும்பை அணிக்காக விளையாடி வரும் இவரை மெகா ஏலத்தில் விட்டுக்கொடுக்காமல் அதிக விலை ரூபாய் 15.25 கோடிக்கு அணியில் தேர்வு செய்தார்கள்.

அதிக விலைக்கு நம்மை மும்பை அணி தேர்வு செய்துள்ளது என்ற பொறுப்புணர்வுடன் ஓப்பனிங் முதல் 20 ஓவர் வரை நின்று அதிரடியாக 81 ரன்கள் குவித்தார்.

இரண்டாம் பாதி:

178 என்ற இலக்கை நோக்கி களத்தில் இறங்கிய டெல்லி அணியின் வீரர்கள். முதல் இரண்டு ஓவர்களில் 21 ரன்கள் அடித்தாலும். முருகன் அஸ்வினின் சுழலில் டிம் ஸைபர்ட்(21), மந்தீப் சிங்(0) ரன்களுக்கு சிக்கினர்.

ப்ரித்வி ஷா(38), ரிஷப் பண்ட்(1), ரோவ்மன் பௌல்(0).

சிறிதளவு ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பை கொடுத்த ஷரதுல் தாகூர்(22) பசில் தம்பியின். பந்தில் விக்கெக்டை இழந்தார்.

தாகூரின் அதிரடியை சிறிதளவும் சொதப்பாமல் அவருக்கு பின் லலித் யாதவ்(48), அக்சர் படேல்(38) என சிக்ஸர் மழையை ரசிகர்களுக்கு காண்பித்துடெல்லி அணியை வெற்றிபெற செய்தனர்.

18.2 ஓவரில் 179 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அணி வென்றது.

பந்து வீச்சில்,                                    O – R – W

டேனியல் சாம்ஸ்                                4 – 57 – 0
முருகன் அஸ்வின்                              4 – 14 – 2
டைமல் மில்ஸ்                                      3 – 26 – 1
ஜஸ்பிரீத் பும்ரா                                 3.2 – 43 – 0
பசில் தம்பி                                             4 – 35 – 3

முருகன் அஸ்வின் கரங்கள் செய்த மாயம்:

2018ம் ஆண்டு முதல் தொடக்க விளையான ரூபாய் 20 லட்சத்துக்கு 2021 வரை பஞ்சாப் அணிக்காக விளையாடி வந்த இவரை. ரூபாய் 1.60 கோடிக்கு மும்பை அணி இவரை ஏலம் எடுத்தது. மும்பை அணிக்காக விளையாடும் மூன்றவது தமிழக வீரர் என்ற பெருமை இவரையே சேரும்.

பந்து வீசிய முதல் ஓவரிலேயே தந்திரமாக 2 விக்கெட்டுகளை பெற்று ஆட்டத்தையே மாற்றினார். ஆனால், பும்ராவின் அனுபவம் சுத்தமாக எடுபடவில்லை.

லலித் யாதவ் அதிரடி :

அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் அனைவரும் ஆட்டத்தை கைவிட்ட நிலையில் கனகச்சிதமாக விளையாடி அணியை வெற்றிப்படிகட்டிற்கு கொண்டு சென்றார்.

இந்த போட்டியின் சாதனைகள் :

பல ஆண்டுகள் கழித்து ப்ராபோர்னே மைதானத்தில் ரசிகர்கள் மத்தியில் போட்டி நடந்தது.
7 புதிய வீரர்கள் டெல்லி அணிக்காக இன்று விளையாடினர்.
IPL 2022ன் பவர் பிலேவில் அதிக ரன்கள் எடுத்து மும்பை அணி (53-0).

மும்பை அணியின் சொதப்பல் :

முருகன் அஸ்வின் விக்கெட்டுகளை வீழ்த்திய பின்னர், அவரின் போக்கிலேயே ஆட்டத்தை கொண்டு செல்லாமல் தவறான பந்துகளை போட்டது தான் காரணம்.

அதிகப்படியான மிஸ் பீல்டிங் செய்தது முக்கிய காரணம்.

இதெல்லாம் ஒரு புறம் இருந்தாலும், IPL தொடரில் முதல் மேட்சை தோற்றல்தான் மும்பை அணி பிலே ஆப்க்கு தகுதி பெரும் என்பது ரசிகர்களின் நம்பிக்கையும், உண்மையும் கூட.

மும்பை அணி 10வது வருடமாக முதல் போட்டியில் தோல்வியை காண்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *