CSK vs KKR போட்டி சுருக்கம் ; ரசிகர்களை மகிழ்வித்த தோனி; மகிழ்ச்சியை சுக்குநூறாக்கிய கொல்கத்தா

IPL போட்டி 1:

டாடா 2022ம் ஆண்டுக்கான IPLன் முதல் போட்டியை இன்று சென்னை மற்றும் கொல்கத்தா அணி களம்கண்டது.

கொல்கத்தா அணிக்காக முதல் முறை விளையாடும் ஷ்ரேயஸ் ஐயர் அணியின் கேப்டனாக டாஸ் வென்று பீல்டிங்கை தேர்வு செய்தார்.

இதனை அடுத்து, புதிய கேப்டன் ஜடேஜாவின் தலைமையிலான சென்னை அணி பேட்டிங் செய்ய தயாரானது.

இரண்டு அணிக்காக இன்று விளையாடும் வீரர்கள் :

சென்னை : ருத்ராஜ் கெய்குவாட், டேவன் கான்வே, ராபின் உத்தப்பா, அம்பட்டி ராயுடு, ரவீந்திர ஜடேஜா(C), சிவம் டுபே, எம் எஸ் தோனி(WK), டுவைன் ப்ராவோ, மிட்சேல் சாண்ட்னர், ஆடம் மில்னே, துஷார் தேஷ்பாண்டே.

கொல்கத்தா : வெங்கடேஷ் ஐயர், அஜிங்க்யா ரஹானே, ஷ்ரேயஸ் ஐயர்(C), நிதிஷ் ராணா, சாம் பில்லிங்ஸ், ஆண்ட்ரே ரஸல், சுனில் நரைன், ஷெல்டன் ஜாக்சன்(WK), உமேஷ் யாதவ், சிவம் மாவி, வருண் சக்ரவர்த்தி.

ஆட்டத்தின் முதல் பாதி;

5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 131 ரன்கள் குவித்தது சென்னை அணி. ரசிகர்களால் பெரிதாக எதிர் பார்க்கப்பட்ட ருத்ராஜ் கெய்குவாட்(0) ரன்கள் ஏதும் அடிக்காமல் முதல் ஓவரிலேயே உமேஷ் யாதவின் வீச்சிற்கு மடிந்தார். அடுத்தடுத்து ஆடிய டேவன் கான்வே (3), ராபின் உத்தப்பா(28), அம்பட்டி ராயுடு(15), ரவீந்திர ஜடேஜா(26*), சிவம் டுபே(3), எம் எஸ் தோனி(50*).

பந்து வீச்சில்,                     O – R – W

உமேஷ் யாதவ்                 4 – 20 – 2
சிவம் மாவி                         4 – 35 – 0
வருண்                                   4 – 23 – 1
நரைன்                                  4 – 15 – 0
ரஸல்                                      4 – 38 – 1

2 ஆண்டுகள் கழித்து தோனி அதிரடியாக அரைசதம் அடித்து ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளார். இதற்கு முன்னதாக 2019ம் ஆண்டு பெங்களூரு அணிக்கு எதிராக 48 பந்துகளுக்கு 84 ரன்கள் விளாசினார். அதுவே தோனியின் IPL தொடரின் அதிகபட்ச ரன்கள்.

இரண்டாம் பாதி :

132 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கிய கொல்கத்தா அணியின் ரஹானே மற்றும் வெங்கடேஷ் ஐயர் ஆட்டமிழக்காமல் முதல் 6 ஓவர்களில் (பவர் பிலே) 43 ரன்கள் அடித்தனர்.

அதன் பின், விங்கடேஷ் ஐயர் (16) ரன்களுக்கு ப்ராவோவின் வீச்சில் தோனியின் கைவசம் சிக்கினார். அவருக்கு பின்னதாக நிதிஷ் ராணாவும் ப்ராவோ வீசிய பந்தை ராயுடுவின் கையில் ஒப்படைத்தார்.

ரஹானே(44) ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.

சாம் பில்லிங்கிஸ் நன்றாக ஆடினாலும் அவரின் விக்கெட்டையும் வீழ்த்தினார் டி.ஜே.ப்ராவோ.

இறுதியாக கொல்கத்தா அணியின் கேப்டின் ஷ்ரேயஸ் 4 அடித்து அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

18.3 ஓவர்களில் 6 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி அமோக வெற்றி.

பந்து வீச்சில்,                  O – R – W

துஷார்                               3 – 23 – 0
மில்னே                           2.3 – 19 – 0
சாண்ட்னர்                       4 – 31 – 1
ப்ராவோ                           4 – 20 – 3
சிவம் டுபே                       1 – 11 – 0
ஜடேஜா                             4 – 25 – 0

இந்த போட்டியின் சாதனைகள்;

IPL 2022 வின் முதல் அரைசதம் அடித்த வீரர் மஹேந்திர சிங் தோனி (50*).
இந்த போட்டியில் அதிவேக பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் 142.4kmph வேகம்.
டி.ஜே.ப்ராவோ அவரின் 170 விக்கெட்டுகளை பூர்த்தி செய்துள்ளார்.

சிறந்த ஆட்டக்காரர் விருதை உமேஷ் யாதவ் பெற்றார்.

கோட்டை தவற விட்ட சி.எஸ்.கே ;

முதலில் பேட்டிங் செய்த சென்னை அணியின் வீரர்கள் சரிவர பந்துகளை எதிர் கொள்ளாததே அவர்களின் தோல்விக்கு காரணம். மற்றோறு பக்கம் இன்று பௌலிங் பிட்ச் வான்கடே ஸ்டேடியத்தில், இரண்டாம் பாதியில் டியூ அதிகம் இருந்ததால். சென்னை அணியின் வீரர்களின் பேச்சை அவர்கள் வீசிய பந்துகள் கேட்கவில்லை. டாஸை தோற்றது முதல் முக்கிய காரணம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *