வில் ஸ்மித்தின் செயலால் பதுங்குவாரா பயில்வான் ரங்கநாதன்?

நேற்றைய தினம் 2021ம் ஆண்டிற்கான ஆஸ்கர் விருது வழங்கும் விழா பிரமாண்டமாக நடை பெற்றது. அதில் வில் ஸ்மித் “கிங் ரிச்சர்ட்” படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை பெற்றார். அவர் விருது பெறுவதற்கு முன்னதாக ஆஸ்கர் விழாவை தொகுத்து வழங்கி வந்த நகைச்சுவை பேச்சாளரும் நடிகருமான கிறிஸ் ராக்ஸை மேடையேறி அறைந்தார். அந்த காணொளி இணையத்தில் மிகவும் வைரலானது.

கிறிஸ் ராக்ஸை அறைந்த காரணம் :

வில் ஸ்மித்தின் மனைவி ஜடா பின்கெட் ஸ்மித் அவர்களுக்கு எதிர்ப்பு சக்தி குறைபாட்டின் காரணமாக தலை முடி கொட்டி போனது. அதை நகைச்சுவையாக கலாய்த்து பேசினார் கிறிஸ் ராக்ஸ். அதற்கு கடும் கோபம் அடைந்த வில் ஸ்மித் தன் மனைவிக்காக கிறிஸ் ராக்ஸை மேடையேறி அறைந்தார்.

பின்னர் ஆஸ்கர் குழு தரப்பில் தெரிவித்ததாவது, இதை நகைச்சுவையாக பேச தான் முயற்சி செய்தோம். ஆனால் அது எதிர் பாராத விதமாக மனஸ்தாபத்தில் முடிந்தது என்றனர்.

ஆஸ்கர் விருது வாங்கிய வில் ஸ்மித் தனது மன்னிப்பை கிறிஸ் ராக்ஸிடம் கேட்டார்.

நெட்டிசன்கள் :

இந்த விஷயத்தை கையில் எடுத்த மீம் கிரியேட்டர்கள் பயில்வான் ரங்கநாதனை வில் ஸ்மித் அறைவது போன்று மீம்களை செய்து இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர். அதற்கு மக்களின் லைக்குகளும் வரவேற்பும் ஏராளம்.

யார் இந்த பயில்வான் ரங்கநாதன் :

சிறு சிறு நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இவரை, சினிமா பிரியர்கள்களுக்கு கண்டிப்பாக ஒரு நடிகராகவும் பத்திரிகையாளராகவும் தெரிந்திருக்கும். தற்போது யூட்யூபில் இவரின் பேச்சு வைரலானாலும் ஆபாசமாக இருப்பதால் மக்களுக்கு பெரும் அதிருப்தியே. எனினும், எழுத்தாளராக இருந்த இவரை எத்தனை பேருக்கு தெரியும்?

பயில்வான் ஒரு சிறந்த எழுத்தாளர் :

பயில்வான் குறித்து மூத்த பத்திரிகையாளர்கள் ஒரு சிலரிடம் கேட்ட போது,

தற்போது இருப்பது போல் முந்தைய காலத்தில் ஆபாச வீடியோக்கள் மக்களுக்கு எளிதாக கிடைக்காது. ஆபாச புத்தகங்கள் மட்டும் தான். எல்லா காலத்திலும் மக்களின் அத்தியாவசியமான உணவு, தூக்கம் போன்று காமமும் முக்கியமான ஒன்று தான். இதை சரியாக புரிந்துக் கொண்ட பயில்வான் ரங்கநாதன், அதிகப்படியான கிசு கிசுக்களையும், பலவிதமான பாலான புத்தகங்களையும் எழுதி தனது கற்பனையின் அளவை காட்டியிருப்பார்.

ஆமாங்க, இவர் செக்ஸ் கதைகளை எழுதுவதில் வல்லவராம்! 90 கால கட்டத்தில் நீங்கள் இது போன்ற புத்தகங்களை படித்து மகிழ்ந்திர்களேயானால் அதில் முக்கிய பங்கு இவரையே சேருமாம்.

அவர் அப்போதைய காலத்தில் இருந்தே இதை பேசுபவர், இது போன்ற விஷயங்களை தவிர்த்து வேறு எதையும் பேச முன் வரமாட்டார் என்றும் தெரிவித்தனர்.

தற்போதய பயில்வான் ரங்கநாதன் :

ஒரு சில ஆயிரங்களை வாங்கிக்கொண்டு பல யூட்யூப் சேனலில், நடிகர் நடிகைகளை பற்றிய ஆபாச பேச்சை பேசிவருகிறார். இவரின் பேச்சிற்கு அதிக வியூஸ் வருவதால் இவரைவைத்து சில யூட்யூப் சேனல்கள் பிழைப்பு நடத்திக்கொண்டு வருகிறது.

இவரின் பேச்சு மக்கள் மத்தியில் எதிர்ப்பை பெற்றாலும் இவர் அதை கண்டுகொள்ளாத வண்ணம் தெரிகிறது.

பிரபலங்களின் எச்சரிக்கை :

சமீபத்தில் நடிகர் சங்க தேர்தலில் வெற்றி பெற்று பொதுச்செயலாளராக பதவியேற்ற நடிகர் விஷால் அவர்கள், நடிகர் நடிகைகளை பற்றி ஆபாசமாக பேசுவதும். அவர்களின் உடலை கேலி செய்யும் விதமாக விமர்சிப்பதும் தவறு என்றும். இது போன்ற செயல்களில் ஈடுபடுவோர்களை சங்கத்தின் மூலமாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார்.

நடிகை ஓவியா சென்ற ஆண்டே பயில்வான் அவர்களுக்கு கண்டனம் தெரிவித்திருந்த நிலையில். தற்போது பல பிரபலங்களின் கோபத்திற்கு ஆளாகியுள்ளார் பயில்வான் ரங்கநாதன்.

மீம்ஸ் :

தன மனைவியை கேலி செய்தமைக்காக வில்ஸ்மித் செய்த செயலை பாராட்டி வரும் மீம் கிரியேட்டர்கள். வில்ஸ்மித் ஆபாச பேச்சாளர் பயில்வான் ரங்கநாதனை அறைவது போன்றும் மீம்களை உருவாக்கி வருகின்றனர்.

அதற்கு மக்களின் கமெண்டுகள் கீழுள்ள இணைப்புகளில்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *