ஜங்கிள் க்ருஸ் திரை விமர்சனம்

அமேசான் காடுகளில் தேடுதல் வேட்டையில் ஈடுபடுகிறார்கள். அங்கு பலவிதமான தடைகளைத் தாண்டி போராடுகிறார்கள். ஒரு நுட்பமான மரத்தையும் அந்த மரத்தின் சக்திவாய்ந்த ஒரு கிளையையும் அந்தக் கிளையில் உள்ள இலையையும் தேடி தேடி  சோர்வுற்று மீண்டும் தேடி, காடு மேடு மலை என்று நாம் பார்த்துப் பார்த்துப் பழகிய பல சிறு வயது கதைகள் இந்த படத்திலும் உள்ளது. போகும் பாதையில் பழங்குடியினர் செவ்விந்தியர்கள் போல் வேடமிட்டு சினிமாவுக்கே உரித்தான பாணியில் காட்டுவாசி வாழ்க்கையை பதிவு செய்து அந்த காட்சிகளை இயக்குனரே கிண்டலும் செய்து உள்ளார். அட்வென்சர் படங்களில் வரும் ரெகுலரான காட்சிகள் இந்த படத்திலும் வரும். ஆனால், அந்தக் காட்சிகளை கேலியும் கிண்டலாகவும் வர்ணித்து அடுத்த கட்டத்திற்கு செல்வது இயக்குனரின் சாமர்த்தியம். பல நூற்றாண்டுகளாக சாபம் பெற்ற படை வீரர்கள் ஒரு குகையில் மாட்டி கொள்கிறார்கள். அவர்களுக்கு மோட்சம் கிடைத்தபின் உயிர்த்தெழுந்து சக்திவாய்ந்த மனிதர்களாக மாறி என்ன செய்கிறார்கள் என்பது இன்னொரு பக்கம் கதையாக தொடர்கிறது. “நிலவின் கண்ணீர்” என்று சொல்லக்கூடிய ஒரு அற்புதமான, யாருக்கும் அவ்வளவு எளிதில் கிடைக்காத பொக்கிஷமான ஒரு இலை- அதைத் தேடும் பல கும்பல்கள் கடைசியில் அந்த நிலவின் ஒளியுடன் யாருக்கு இலை கிட்டியது அதை வைத்து என்ன செய்தார்கள் என்பதுதான் படத்தின் கிளைமாக்ஸ்.

எல்லா வயதினரும் பார்த்து மகிழும்படி மிகவும் அழகாக ஒரு சிறந்த பொழுது போக்கு படமாக “ஜங்கிள் கிருஸ்” திரைப்படத்தை தயாரித்துள்ளனர். எமிலி பிளண்ட் மற்றும் டுவைன் ஜான்சன் ஆகிய இருவரும் தனித்துவமான நடிகர்கள். கொடுத்த வேலையை நேர்த்தியாகவும் பிரம்மாண்டமாகவும் செய்து உள்ளனர்.

இருப்பினும் ரசிகர்கள் எதிர்பார்த்த அளவிற்கு இல்லாதது வருத்தமே.

படம் ஆரம்ப காட்சி முதல் கிளைமாக்ஸ் காட்சி வரை பரபரப்பின் உச்சமும் ரசிகர்களை இருக்கையின் நுனியில் அமர வைக்கும். அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் செல்லும் ஒரு அற்புதமான கப்பல் பயணத்தில் ஒன்றன் பின் ஒன்றாக ஏற்படும் திடுக்கிடும் சம்பவங்களோடு பேண்டசி கலந்த ஒரு பொழுதுபோக்கு படம் “ஜங்கிள் க்ருஸ்”.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *