டோண்ட் பிரித் 2 திரைவிமர்சனம்

DON’T BREATHE 2 -ஆங்கிலம் தமிழ் தெலுங்கு மற்றும் ஹிந்தி
Banner -Sony Pictures Entertainment
Release Date -September 17th 2021

Fede Álvarez இன் நேர்த்தியான இயக்கத்தில் 2016 ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு HorrorThriller திரைப்படம், Don’t Breathe. உலகெங்கிலும் மகத்தான வெற்றி பெற்ற அப்படம், இந்தியாவிலும் பெருவெற்றி பெற்றதென்பது குறிப்பிடத்தக்கது.

போரில் பல வீர தழும்புகளை பெற்றிட்ட ஒரு உன்னதமான வீரர் தான், Norman Nordstrom.
அந்த கதாபாத்திரத்தை இப்படத்தில் ஏற்று நடித்திருந்தவர், Stephen Lang என்கிற நடிகர்.
ஒரு விபத்தில் கண் பார்வையை இழந்த அவர், தனிமையானதோர் வாழ்க்கையை வாழ்ந்துவரும்போது , அவரது வீட்டிற்குள் சிலர் அது மீறி நுழைந்து பிரச்சனை தர முற்படும்போது, தான் கற்ற வித்தைகளை அவர்கள்பால் பிரயோகித்து தன்னை காத்துகொண்டு அவர்களையும் தாக்குவதுதான் அப்படத்தின் கதையம்சம்!
இந்த இரண்டாம் பாகம், இந்நிகழ்வுகள் நடந்தேறிய பிறகு, 8 ஆண்டுகளுக்கு பின்னர் நிகழ்கிறது!

Norman Nordstrom.தற்சமயம், தனது 11 வயது வளர்ப்பு மகள் Phoenix (Madelyn Grace ) உடன் அமைதியாக வாழ்ந்து வரும் வேளையிலே இந்த சிறுமியை ஒரு சிலர் கடத்தி செல்ல முற்படுகின்றனர்! இச்செயலை முன்னின்று நடத்தி செல்லும் நபருக்கும் அச்சிறுமிக்கும் இடையே ஒரு தொடர்புண்டு!

மீண்டும் தன் வாழ்க்கையில் விரோதிகள் புகுந்து குழப்பம் விளைவிக்க முனைவதைக்கண்டு கொடிது எழுகிறார், Norman .

தன்னுள் புதைந்து கிடைக்கும் வெறி கொண்ட மிருகத்தை சிலர் தட்டி எழுப்பிட்டதை கண்டு கடும் சினம் மேலிட புலியென புறப்படுகிறார், அவர்!
கண் பார்வையற்ற ஒரு மனிதருக்குள் இத்தனை கோபமா, இவ்வளவு சாதுர்யமாக அவரால் சண்டை இட இயலுமா என திகைப்புற்று நிற்கின்றனர், எதிரிகள்!
Brendan Sexton 111 மற்றும் Stephanie Arcila ஆகிய இருவரும் முக்கிய வேடங்களில் தோன்றி நடித்துள்ளனர்.
Pedro Luque – படத்தின் ஒளிப்பதிவாளர்.
Roque Baños Lopez படத்திற்கு இசையமைத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *