7 ஆயிரத்திற்கும் மேலான பாடல்கள், 1400க்கும் மேற்பட்ட படங்கள், 20,000திற்கும் மேலான இசையை நிகழ்ச்சிகள் என்பது அவ்வளவு எளிதான விஷயமல்ல. ஆனால் இது அனைத்தையும் தன்வசம் வைத்துள்ள இசையமைப்பாளர் தான் இசைஞானி இளையராஜா.
கடந்த ஜூன் 2ஆம் தேதி கோயம்புத்தூரில் இளையராஜாவின் இசை நிகழ்ச்சி கோலாகலமாக நடந்தது. இதனை தொடர்ந்து வருகிற ஜூன் 26 ஆம் தேதி மதுரையில் “இசையென்றால் இளையராஜா” என்ற இளையராஜாவின் இசைநிகழ்ச்சி நடக்கவுள்ளது.
வேலம்மாள் குளோபல் ஸ்கூலில் நடக்கும் இந்நிகழ்ச்சிக்கு ரூபாய் 250 முதல் 1 லட்சம் வரை டிக்கெட்டுகள் விற்பனைக்குள்ளது. (ஜெனரல், பிரான்ஸ். சில்வர், கோல்ட், டைமண்ட், வி.வி.ஐ.பி) என்ற தர வரிசையில் இணையத்தளத்தில் டிக்கெட்டுகள் முன்பதிவிற்கு உள்ளது.
டிக்கெட் விலை பட்டியல் (விலை / ஜி.எஸ்.டி வரியுடன்)
ஜெனரல் – 250 / 264.76
பிரான்ஸ் – 999 / 1,248.36
சில்வர் – 1,999 / 2,497.98
கோல்ட் – 5,000 / 6,248.10
டைமண்ட் – 10,000 / 12,496.20
வி.வி.ஐ.பி – 1,00,000 / 1,24,962
மேலும், ஜி.எஸ்.டி வரி மற்றும் PAYTM செயலியின் கட்டணத் தொகை சேர்த்து ஒரு டிக்கெட்டின் விலை 1,24,962 ரூபாய்க்கு விற்பனையிலுள்ளது.
இதை தொடர்ந்து வி.வி.ஐ.பிக்கு வழங்கும் டிக்கெட்டை, வாடிக்கையாளரின் முழுமையான சோதனைக்கு பிறகு தக்க அனுமதி இருந்தால் மட்டுமே வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்ச்சி குறித்து இசைஞானி இளையராஜா பேசிய வீடியோ பதிவு