தெலுகு இயக்குனர் வம்சி இயக்கத்தில் விஜய் தற்பொழுது தனது 66 வது திரைபடத்தில் நடித்து வருகிறார்.அந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் நிறைவுபெற்றது. சரத்குமார், ரஷ்மிகா மந்தனா, ஷ்யாம், பிரகாஷ்ராஜ், ஜெயசுதா, யோகி பாபு என பல நட்சத்திரப்பட்டாளங்களில் நடிக்கும் இப்படத்தில்.
நாயகி ரஷ்மிகா-வின் பாத்திரம் பற்றி ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.தளபதி 66-இல் ரஷ்மிகா சுயநலம்மிக்க தலைக்கனம் அதிகமாக இருக்கும் பெண் பாத்திரத்தில் தான் நடித்து வருக்கிறார். இதுவரை, அவர் அப்படி ஒரு கதாபாத்திரத்தில் நடித்ததே இல்லை என்பதால் கஷ்டப்பட்டு நடிக்கிறார் என தெலுகு மிடியாவில் செய்தி வெளியாகியுள்ளது. ரஷ்மிகா விஜயுடன் நடிக்க வேண்டுமென சில வருடங்களாக ஆசையை கூறிவந்தார். அந்த ஆசை தற்போது தளபதி-66 திரைப்படம் மூலமாக தான் நிறைவேறியுள்ளது என்று சமீபத்தில் ரஷ்மிகா தெரிவித்தார்.
மேலும், தளபதி விஜய் இப்படத்தில் இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார் என்றும். சரத்குமார் விஜய்க்கு அப்பாவாக நடித்து வருகிறார் என்றும் தகவல்கள் கசிந்து வருகிறது. இது ஒருபுறம் இருக்க இப்படத்தில் நடிகர் மகேஷ் பாபு சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளார் என்றும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.