சொன்ன வார்த்தையைக் காப்பாற்ற மறந்த நடிகர் நானி – அடடே சுந்தராவின் தோல்விக்கு அது தான் காரணமா?

நானி மற்றும் நஸ்ரியா நடிப்பில் கடந்த ஜூன் 10ஆம் தேதி வெளியான திரைப்படம் “அடடே சுந்தரா”. மக்கள் மத்தியில் ஓரளவு கூட இப்படத்திற்கு வரவேற்பில்லை என்பதை பல திரையரங்குகளின் முன்பதிவு காட்டிக் கொடுக்கிறது.

மேலும், சில தினங்களுக்கு முன்பு இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. அந்நிகழ்ச்சியில் பத்திரிகையாளர் பலரும் பல கேள்விகளை எழுப்பிவந்தனர். அப்போது, பத்திரிகையாளர் ஒருவர் “ஷியாம் சிங்கா ராய் படத்தை சில தினங்களுக்கு முன்பு தான் பார்த்தேன். மிக சிறப்பாக இருந்தது. ஆனால், அந்த படம் பெரும் வரவேற்ப்பை பெறவில்லையே? ஷியாம் சிங்கா ராய் படத்திற்கு பெரிய அளவில் ப்ரொமோஷனும் இல்லை. பத்திரிகையாளர்களுக்கான சிறப்புக் காட்சியும் திரையிடவில்லையே? அடடே சுந்தரா படத்திற்காவது பத்திரிகையாளர் காட்சி திரையிடப்படுமா?” என்று எழுப்பிய கேள்விக்கு.

“படத்தின் இறுதிகட்ட தயாரிப்பு பணிகளை நாங்கள் குறைத்து எடைபோட்டு விட்டோம். நாங்கள் நிர்ணயம் செய்த நாட்களை விட அதிக நாட்கள் எடுத்துக் கொண்டது. அதனால் நாங்கள் திட்டமிட்ட அனைத்தும் தவறாக முடிந்தது. மேலும், அடடே சுந்தரா படத்தை நிச்சயம் உங்களுக்கு திரையிடுவோம்.” என்று உறுதியளிக்கும் வகையில் நடிகர் நானி பதிலளித்தார். ஆனால், இதுவரை பத்திரிகையாளர்களுக்கான காட்சி திரையிடப்படவில்லை.

மேலும், திரையரங்குகளில் “விக்ரம்” திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில். அடடே சுந்தரா திரைப்படத்திற்கு போதுமான வரவேற்பில்லை.

தொடர்ச்சியாக இருமுறை நடிகர் நானியின் திரைப்படம் தமிழில் மண்ணைக் கவ்வியதற்கு போதிய எதிர்பார்ப்பை உருவாக்காததும், சரியான திட்டமிடுதல் இல்லாமல் ப்ரொமோஷன் செய்ததும் தான் முக்கிய காரணம் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *