இதென்னப்பா இளையராஜாவுக்கு வந்த சோதனை?

வெறும் ஹிந்தி பாடல்களையும் அவ்வப்போது தமிழ்ப் பாடல்களையும் கேட்டு ரசித்துக் கொண்டிருந்த நம்மை முழுநேரமும் தமிழ்ப் பாடல்களுக்கு அடிமையாகும் அளவிற்கு இசையமைத்தவர் இசைஞானி இளையராஜா.

எத்தனை இசையமைப்பாளர்கள் வந்தாலும், இன்றளவும் நம்மால் அவரின் பாடல்களை கேட்காமல் நாட்களை கடத்த முடியாது. அந்த அளவிற்கு அவரின் இசை நம்மை அடிமைப்படுத்தி வைத்திருக்கிறது.

ஆனால், சமீபமாக வெளிநாடுகளில் அதிக அளவில் இசைக்கச்சேரி நடத்தி வருகிறார் இசைஞானி இளையராஜா. இவ்வளவு ஏன். சென்னையில் நடந்த இவரின் இசைக்கச்சேரிக்கு 1 லட்ச ரூபாய் வரை டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டன.

மார்ச் மாதம்,

துபாய் EXPO 2022 என்ற விழா கோலாகலமாக நடந்தது. அவ்விழாவிற்கு, தமிழக முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் சென்று வந்தார். அதே விழாவில், இசைஞானி இளையராஜாவின் இசைக்கச்சேரி நடந்தது. அந்த இசை நிகழ்ச்சியைக் காண பல லட்சக்கணக்கானோர் வந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது,

“இசை ராஜாங்கம்” என்ற இசைக் கச்சேரியை “அக்டோபர் 15″ம் தேதி துபாயில் நடுத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. மேலும், இந்த நிகழ்ச்சி பிரபல கிரிக்கெட் மைதானமான ஷார்ஜாவில் நடப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. ஷார்ஜா மைதானத்தின் கொள்ளளவு 16000. ஆனால், அங்கு சில தொழில் நுட்பக்கோளாறு காரணமாக “இசை ராஜாங்கம்” நிகழ்ச்சியை ஒத்திவைக்கிறோம் என செய்தியளிக்கப்பட்டது.

அதன்பின், இம்மாதம் “நவம்பர் 25″ம் தேதி, கோககோலா அரினாவில் நடத்துவதாக அறிவிக்கப்பட்டது. இந்த இடத்தின் கொள்ளளவு 17000. நிகழ்ச்சி நடக்க இன்னும் 6 நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், இதுவரை 6000 டிக்கெட்டுகள் கூட விற்கப்படவில்லை எனவும். டிசம்பர் மாதத்திற்கு இந்நிகழ்ச்சி ஒத்திவைக்கப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொத்தியெடுக்கும் ட்விட்டர் குருவிகள்;

இச்செய்தி அறிந்த ட்விட்டர் குருவிகள், இளையராஜாவை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இளையராஜா மீதுள்ள வெறுப்பு தான் கரணம் எனவும், இளையராஜா அவரின் தலைக்கனத்தை குறைத்துக் கொள்ளவேண்டும் எனவும் அட்வைஸ் செய்து வருகின்றனர்.

1400 படங்களுக்கு மேல் இசையமைத்த மிகப்பெரும் கலைஞனுக்கு இந்த நிலையா? என்று இசைஞானியின் ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர்.

மேலும், நியூசிலாந்தில் “MASTERO IN AUCKLAND” என்ற இளையராஜாவின் தலைமையிலான இசைநிகழ்ச்சி 24 செப்டெம்பர் நடக்கவிருந்த நிலையில். தொழில் நுட்பக்கோளாறை காரணம் காட்டி “டிசம்பர் 3″ம் தேதிக்கு மாற்றி வைத்துள்ளனர் என்பது கூடுதல் தகவல்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *