‘வலிமை’ படத்தின் படப்பிடிப்பு கொரோனா வைரஸால் தற்காலிகமாக நிறுத்தம் – மீண்டும் எப்போது துவங்கும்?
H.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் ‘வலிமை’ படத்தின் படப்பிடிப்பு நேற்று முதல் தான் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதுவரை சென்னையில் உள்ள கோகுலம் ஸ்டூடியோஸ்-ல் தான் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது.
கொரோனா பாதிப்பை தொடர்ந்து படப்பிடிப்பை நிறுத்த வேண்டும் என்ற அரசு ஆணையை ஏற்று நேற்று முதல் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதன் பிறகு, ஏப்ரல் முதல் வாரத்தில் சென்னை கோகுலம் ஸ்டுடியோஸ்-ல் படப்பிடிப்பு மீண்டும் துவங்கும் என படக்குழு அறிவித்துள்ளது.