மீண்டும் ஒரு சாதனை; வெளியானது ‘AVATAR-2’ன் ரிலீஸ் தேதி

2009 ஆம் ஆண்டு ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளியான படம் ‘AVATAR’ இந்த படம் 3 ஆஸ்கார் விருதுகளை வாங்கியுள்ளது, அது மட்டுமின்றி 148 சர்வதேச விருதுகளுக்காக தேற்சிசெய்யப்பட்டு, 73 விருதுகளை குவித்தது.

முந்தையதாக 1997ல் ஜேம்ஸ் கேமரூன் இயக்கி வெளிவந்த ‘டைட்டானிக்’ படம் உலக அளவில் ₹16,307+ கோடி வசூல் செய்து அசைக்க முடியாத இடத்தில் இருந்தது. பின்னர் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கிய ‘AVATAR’ படம் 12 வருடங்கள் கழித்து ₹21,011+கோடி வசூல் செய்து அந்த சாதனையை முறியடித்தது. தந்து சாதனையை தன்னால் மட்டுமே முறியடிக்க முடியும் என்று அவர் இதன் மூலம் சர்வதேச திரையுலகிற்கு உணர்த்தினார்.

இதனை தொடர்ந்து முதல் மற்றும் இரண்டாம் இடத்தில் இருந்த ஜேம்ஸ் கேமரூன்ன் படங்களின் சாதனையை மார்வெல் ஸ்டுடியோஸ் தயாரித்து வெளியிட்ட ‘AVENGERS : END GAME’ முறியடிக்கும் என எதிர் பார்த்த நிலையில் இரண்டாம் இடத்தில் இருந்த ’TITANIC’ படத்தின் சாதனையை மட்டுமே ₹18,855+ கோடி ரூபாய் வசூல் செய்து முந்தியது.

12 ஆண்டுகளாகியும் எனது சாதனையை உடைத்தெறிய யாரும் இல்லையா? என இயக்குனர் ஜேம்ஸ் கேமரூநாக இருக்கட்டும் ‘AVATAR’ படக்குழுவாக இருக்கட்டும் சிந்தித்து வந்தது மட்டுமல்லாமல் மீண்டும் ஒரு முறை எனது சாதனையை நானே வீழ்த்துவேன் என ‘AVATAR-2’ பாகத்தை இயக்க ஆரம்பித்தார் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன்.

₹1845+ கோடி ரூபாய் செலவில் உருவாகி வரும் இந்த படம், படப்பிடிப்பு ஆரம்பித்தபோதே உலக அளவில் பெரிய அளவில் பேசப்பட்டது.இந்த படம் 2021 டிசம்பர் மாதம் வெளிவரும் என முன்னதாக அறிவிக்கப்பட்டது ஆனால் கரோனா பெருந்தொற்று காரணமாக வெளியாகவில்லை.இந்நிலையில் ‘AVATAR-2’ன் ரிலீஸ் தேதி வெளியானது.

‘AVATAR-2’ 2022ம் ஆண்டு டிசம்பர் மாதம் 16ம் தேதியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. 12 ஆண்டுகளுக்கு முன் வெளியான ‘AVATAR’ படம் 2009 டிசம்பர் 18ம் தேதி அன்று வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *