நடிகர் அஜித் குமார் நடிப்பில் H. வினோத் இயக்க, போனி கபூர் தயாரிப்பில் 2019ம் ஆண்டு வெளியான படம் ‘நேர்கொண்ட பார்வை’. இப்படம் ரீமேக் படமாக இருந்தாலும் மாபெரும் வெற்றியடைந்தது. இந்த படத்திற்கு முன்னதாகவே ‘வலிமை’ படத்தின் பேச்சுவார்த்தைகள் நடந்தது. இருப்பினும், ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் வெற்றி ‘வலிமை’ படத்தின் எதிர்பார்ப்பை ரசிகர்களுக்கு தூண்டியது.
நேற்று (13.01.2022) ‘வலிமை’ படத்தின் ரிலீஸ் உறுதி செய்யப்பட்டது. ஆனால், கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக இந்த படம் ரிலீஸ் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
படத்தின் ஷூட்டிங் துவங்குவதற்கு முன்னதாகவே யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டார். இது மேலும் ரசிகர்களுக்கு மிகுந்த ஆர்வத்தையும் தூண்டியது. சமீபத்தில் வலிமை படத்தின் பாடல்கள் மற்றும் தீம் மியூசிக் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது.
தற்போது, இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவிற்கும் இயக்குனர் H.வினோதிற்கும் சிறிய பிரச்சனை எனவும், ‘வலிமை’ படத்தின் பின்னணி இசையமைப்பிற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்துக் கொண்டிருப்பதாகவும். காற்று வாக்கில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அது மட்டுமின்றி, பாடல்கள் மற்றும் சவுண்ட் ட்ராக்கின் NOC யுவன் ஷங்கர் ராஜா கொடுப்பதற்கு தயாராக இருப்பதாகவும் சினிமா வட்டாரத்தில் பேச்சுகள் அடிபட்டுக் கொண்டிருக்கின்றன.
இதற்கு முன்னதாக இசையமைப்பாளர் ஜிப்ரான், இயக்குனர் H வினோத் இயக்கிய ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்திற்கு இசையமைத்து நல்ல வரவேற்பை பெற்றார்.
இன்று (14.01.2022) நேர்கொண்ட பார்வை’ படத்தின் மூலம் நடிகர் அஜித் குமார் அவர்களை, ரசிகர்கள் திரையரங்கில் கொண்டாடி 890 நாட்கள் ஆகிறது என்பது குறிப்பிடதக்கது.