அஜித் குமார் நடிப்பில், எச்.வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரித்து 2023ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியாகவுள்ள படம் “துணிவு”.
மேலும், விஜய் நடிப்பில் உருவாகியுள்ள “வாரிசு” திரைப்படமும் பொங்கலுக்கு வெளியாகி இவ்விரு படங்களும் நேரடியாக மோதவுள்ளது.
அதிர்ச்சி தகவல்!
துணிவு திரைப்படம் இந்த வருடமே ரீலிஸ் ஆகவேண்டிய படம். அஜித்குமாரால் மட்டுமே இந்த படத்தின் படப்பிடிப்பு தாமதமானது என்று சினிமா வட்டாரங்களில் பரவலாக பேச்சு அடிபடுகிறது.
அப்படி என்ன செய்தார் அஜித்?!
கடந்த சில வருடங்களுக்கு முன்பு அறுவை சிகிச்சை ஒன்றை செய்தார் அஜித். அதன் காரணமாக குடியை நிறுத்திவிட்டார். ஆனால், சமீபமாக மீண்டும் மது அருந்துவதை வாடிக்கையாக வைத்து வருகிறாராம் அஜித்.
மேலும், துணிவு படத்தின் பேங்காக் படப்பிடிப்பின் போது, இரவு பகல் பாராமல் மதுபோதையில் இருந்தாராம் அஜித். அதன் விளைவாகவே துணிவு படத்தின் படப்பிடிப்பு தாமதமானது எனவும், உச்ச நட்சத்திரம் என்பதால் அவரை ஏதும் சொல்லமுடியாமல் படக்குழு தவித்தது என்றும் சினிமா வட்டாரங்களில் பேச்சு அடிபடுகிறது.
இச்செய்தியை கேட்ட ரசிகர்கள் அதிர்ச்சியிலும் சோகத்திலும் உள்ளனர். இது ஒருபுறம் இருக்க, விக்னேஷ் சிவனுடன் ஒப்பந்தமாகியுள்ள படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு சினிமாவிலிருந்து ப்ரேக் எடுக்கிறாராம் அஜித். ஏற்கனவே, பல நடிகர்கள் தங்களுக்கென பல வலுவான இடங்களை நிரப்பி வர, நீண்ட இடைவேளை எடுத்தால் அஜித்தின் சினிமா என்னவாகும் என்பது கேள்விக்குறி தான்.