நேபோடிசத்தை அரசியல் மூலம் மாற்றுகிறாரா யுவன்; இளையராஜாவிற்கு பாரத ரத்னா விருதா?

சில தினங்களாக பல கடுமையான விமர்சனங்களையும் எதிர்ப்பையும் சந்தித்து வருகிறார் இசைஞானி இளையராஜா. அம்பேத்கரும் மோடியும் இந்தியாவிற்காக ஒரே சிந்தனையை கொண்டவர்கள் தான், என்று ஒரு புத்தகத்தின் முன்னுரையில் எழுதியிருக்கிறார். அது தான் சர்ச்சைக்கு காரணம்.

தற்போது, இளையராஜாவிற்கு ராஜ்யசபா சீட் கொடுக்க பா.ஜ.க முடிவு செய்ததாக செய்திகள் அரசல் புரசலாக பரவி வருகிறது.

இதைத் தொடர்ந்து, இன்று காலை தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை இசைஞானி இளையராஜாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்றும், அதற்காக தலைமைக்கு கடிதம் அனுப்பவுள்ளதாகவும் கூறியது மேலும் பல சர்ச்சைகளை கிளப்பி வருகிறது.

இது ஒருபுறம் இருக்க, இசைஞானியின் இ(சை)ளைய வாரிசு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கறுப்புடை அணிந்து “டார்க் திராவிடியன்; ப்ரௌட் தமிழன்” என்று பதிவிட்டுருந்தது பல விதமான கேள்விகளையும். மக்கள் மத்தியில் பலவிதமான சிந்தனைகளையும் கிளப்பியுள்ளது.

இசைஞானி இளையராஜாவை பின்பற்றி யுவனும் இசையில் ஒரு கலக்கு கலக்கினாலும் இளையராஜாவின் அரசியல் ரீதியான கருத்துக்களை எதிர்ப்பது போல் உள்ளது, இன்று யுவன் தனது இன்ஸ்டாவில் பதிவிட்டது.

இதன் மூலம், இசையில் அப்பாவை பின் பற்றினாலும் அரசியல் கருத்தில் சற்று மாறுபட்டு நிற்பது தமிழக மக்கள் மத்தியில் மிக வரவேற்பைப் பெற்று வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *