யசோதா திரைவிமர்சனம் – (3/5)

சமந்தா, வரலக்ஷ்மி சரத்குமார், உன்னி முகுந்தன், சம்பத், சத்ரு, முரளி சர்மா நடிப்பில், ஹரி-ஹரிஷ் இரு இயக்குனர்களின் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் “யசோதா”. ஸ்ரீதேவி மூவிஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளனர்.

கதைப்படி,

சமூகத்தில் பெரிய செல்வாக்குடைய ஒருவரும், மாடல் அழகியும் கார் விபத்தில் இறக்கின்றனர். அவ்வழக்கை விசாரிக்கும் தனிக்குழு அழகு சாதன பொருள் தயாரிக்கும் நிறுவனம் பின்னணியில் உள்ளதை கண்டறிகின்றனர்.

மேலும், ஹாலிவுட் ஹீரோயின் ஒருவர் மர்மமான போதைப் பொருள் கலந்த ஜூஸ் ஒன்றை குடித்ததால் இறந்து போகிறார்.

இது ஒருபுறமும், பணத்தேவையினால் வாடகைத் தாயாக மாறுகிறார் சமந்தா. சமந்தாவை போல், பல வாடகைத்தாய் வரலக்ஷ்மி தலைமையிலுள்ள ஓர் இடத்தில் பார்த்துக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலும், அங்கு பிரசவ வலி வந்து பிரசவத்திற்கு செல்லும் பெண்கள் திரும்பி வராததனால் சந்தேகமடையும் சமந்தா. அங்கு என்ன நடக்கிறது என்பதையறிய, தடை செய்யப்பட்ட இடங்களுக்கு செல்கிறார்.

அங்கு சமந்தா பார்த்தது என்ன? கார் விபத்தில் இறந்தவருக்கு சமந்தா இருக்கும் இடத்திற்கும் ஏதேனும் சம்பந்தம் உள்ளதா? அழகு சாதனா பொருட்கள் எப்படி தயாரிக்கப்படுகின்றன. அவை ஆபத்தானவையா? மர்மமான கொலைகளுக்கு யார் காரணம்? என்ற கேள்விகளுக்கு விடை தான் படத்தின் இரண்டாம் பாதி.

ஏற்கனவே, தி பேமிலி மேன் 2 படத்தின் ஆக்ஷனில் அதகளம் செய்து வியக்க வைத்திருப்பார் சமந்தா. அந்த சண்டைக் காட்சிகளை மிஞ்சிய சண்டை இப்படத்தில் உண்டு. முந்தைய படங்களை விட இப்படத்தில் சிறப்பான நடிப்பு.

ஹீரோயின் கதாபாத்திரமோ, வில்லையோ இப்போதுள்ள நாயகிகளில் பொருத்தமானவர் வரலக்ஷ்மி சரத்குமார் தான். சமீபத்தில் வில்லியாக மிரட்டி வரும் அவர் இந்தப் படத்திலும் மிரட்டியுள்ளார்.

உன்னி முகுந்தன், சம்பத், சத்ரு, முரளி சர்மா என உடன் நடித்த கலைஞர்களும் படத்திற்கு தேவையான நடிப்பை கொடுத்துள்ளனர்.

ஹரி-ஹரிஷின் கதைத் தேர்வு மிக புதிய களம். வாடகைத்தாய், அழகு சாதனப்பொருள் அதில் நடக்கும் தவறுகள் என அனைத்தையும் வெளிச்சத்திற்கு கொண்டுவந்துள்ளனர். ஆனால், திரைக்கதையில் சுவாரஸ்யம் கூட்டியிருந்தால் மேலும் சிறப்பாக அமைந்திருக்கும்.

இப்படம் 2006ல் வெளியான “ஐலாண்ட்” என்ற ஆங்கிலப்படத்தை போல் இருக்கிறதோ என்ற எண்ணம். ஆனால், கிளைமாக்ஸ் நிச்சயம் விஜய்யின் “போக்கிரி” படத்தை பார்ப்பது போல் இருக்கும்.

யசோதா – ஆக்ஷன் அதகளம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *