நடிகை சமந்தா தற்போது அரியவகை நோய் பாதிக்கப்பட்டு படிப்படியாக மீண்டு வருகிறார். அவர் நடித்துள்ள “யசோதா” திரைப்படம் வருகிற நவம்பர் 11ம் தேதி ரிலீஸுக்கு தயாராகவுள்ளது. இப்படத்தில் நடிகை சமந்தா வாடகைத் தாயாக நடித்துள்ளார்.
இப்படத்தின் ரிலீஸ் நெருங்கிவருவதால் உடல் நிலையையும் பொருட்படுத்தாமல் படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் பிஸியாக உள்ளார்.
அந்த வகையில் சமீபத்தில் நடந்த நேர்காணல் ஒன்றில் வாடகைத்தாய் முறை குறித்து தங்களது நிலைப்பாடு என்ன? என்ற கேள்வியை நடிகை சமந்தாவிடம் கேட்கப்பட்டது. அதுமட்டுமின்றி, தமிழ்நாட்டில் வாடகைத்தாய் முறை தான் ஹாட் டாப்பிக்காகவுள்ளது. விக்னேஷிவன் நயன்தாரா ஜோடி அந்த முறையில் குழந்தை பெற்றுக்கொண்ட நிலையில், இந்த விவகாரம் குறித்து தெரிந்துகொள்ள மக்கள் ஆர்வமாகவுள்ள சமயத்தில் சமந்தா நடிப்பில் இப்படி ஒரு படம் வருவது பலருக்கும் ஆச்சர்யத்தையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இது குறித்து சமந்தா கூறியதாவது,
வாடகைத்தாய் தமிழ்நாட்டின் ஹாட் டாப்பிக்காக இருப்பதனால் “யசோதா” படம் பண்ணவில்லை. சில வருடங்களுக்கு முன்பே இப்படத்தில் நான் நடித்துவிட்டேன். மேலும், அவ்வாறு குழந்தை பெற்றுக்கொள்வது மகிழ்ச்சியைத் தந்தாள் அப்படி குழந்தை பெறுவதில் தவறில்லை. அது மட்டுமின்றி தற்போது படத்திற்கு இலவச ப்ரோமோஷன் கிடைத்துள்ளது என சமந்தா கூலாக பதிலத்துள்ளார்.