கலாநிதிமாறனை தொடர்ந்து போனி கபூருடன் மோதும் விஷால்

உலகமே எதிர்பார்த்த எஸ் எஸ் ராஜமெளலி இயக்கத்தில் ஜுனியr என் டி ஆர் மற்றும் ராம் சரண் நடிக்க 7ஆம் தேதி வெளியாக இருந்த படம் “RRR”. கொரோனா மூன்றாவது அலை, மற்றும் இன்னும் சில பிரச்சனைகள் காரணமாக படத்தின் வெளியீட்டு தேதி மாற்றப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, பொங்கல் தின கொண்டாட்டமாக 13 ஆம் தேதி அஜித்குமாரின் “வலிமை” வெளியாகவுள்ளது. இந்நிலையில், வேறு படங்கள் எதுவும் மோதாத நிலையில், ஜனவரி 26 ஆம் தேதி வெளியாக இருந்த விஷாலின் “வீரமே வாகை சூடும்” பொங்கல் தின விடுமுறைக்கே வெளிவர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அஜித்குமாரின் வலிமையோடு மோத முடிவெடுத்திருக்கிறது “வீரமே வாகை சூடும்” படக்குழு. ஓரிரு தினங்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே வீரமே வாகை சூடும் படத்தின் டீசர் பலரால் பாராட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *