ட்விட்டரில் மாஸாக என்ட்ரி கொடுத்த சீயான்; ரசிகர்களிடம் கோலாகல வரவேற்பு
இதுவரை எந்த சமூக வலைதளங்களிலும் எனக்கு என்னை தனிப்பட்ட கணக்கு உருவாக்காமல் இருந்த மாபெரும் வெற்றி நாயகன் இன்று தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்கை உருவாக்கியுள்ளார்.
இவரின் முதல் படம் எதிர்பாராத வகையில் மாபெரும் வெற்றியடைந்தது. அதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து வெளியான 9 படங்களுமே மாபெரும் வெற்றி பெற்றது. அதிலிருந்து இவர் வெற்றி நாயகன் என்று புகழ் பெற்றார். இவர் இதுவரை நடித்துள்ள ஒரு சில படங்களை தவிர்த்து, அனைத்து படங்களுமே மாபெரும் வெற்றிப் படங்கள்தான்.
அவர் வேறு யாருமல்ல சியான் விக்ரம் தான்.
டிவிட்டர் பக்கத்திற்கு வந்த சில மணி நேரத்திற்குள்ளாகவே 41 ஆயிரத்திற்கும் மேலான ரசிகர்கள் இவர் பின் தொடர ஆரம்பித்து விட்டனர்.
இதுவரை இவரின் பெரிய ஹேஷ் டேக் பயன்படுத்தி மட்டுமே பல பதிவு செய்துவந்த ரசிகர்கள். இனி, நேரடியாக @chiyaan என்ற டேகை பயன்படுத்தி அவருக்கான பதிவை செய்யலாம்.
மேலும், ட்விட்டர் கணக்கு ஆரம்பித்த குறைந்த நேரத்தில் அதிக ஃபாலோயர்களை பெற்ற நடிகர் என்று இவர் சாதனை படைக்க அதிக வாய்ப்புள்ளது.
— Chiyaan Vikram (@chiyaan) August 12, 2022