வடசென்னை 2 படத்தை கைவிட்டார் வெற்றி மாறன்

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில், தனுஷ், அமீர், சமுத்திரக்கனி, ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் பலர் நடிப்பில் வெளியாகி சக்க போடு போட்ட படம் தான் வடசென்னை.

வடசென்னை மொத்தம் 3 பாகம் கொண்ட படம் என அப்போது பேசப்பட்டு வந்தது. இந்நிலையில் வடசென்னை 2 படத்திற்காக ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு இருந்தனர். தற்போதோ, அவர்களின் எதிர்பார்ப்புக்கு முற்றுப்புள்ளி வைக்காமல், துணை காலிட்டு ஆர்வத்தை தூண்டியுள்ளார் வெற்றி மாறன்.

வடசென்னை – 2ஆம் பாகத்தை படமாக இயக்காமல், இணையத்தொடராக எடுக்கவுள்ளாராம் வெற்றிமாறன். சில மாதங்களுக்கு முன்பே இந்த பேச்சு அடிபட்ட நிலையில். தற்போது, வெப் சீரிஸுக்காக கதையை மேலும் விரிவுபடுத்தி வருகிறாராம் வெற்றிமாறன் என்ற செய்தி வெளியாகியுள்ளது.

வடசென்னை 2 செய்தியை கேட்டு பல ரசிகர்கள் உற்சாகமாக இருந்தாலும். OTT தளத்தில் வெளியாவது சோகமாக உள்ளது. என்னதான் இருந்தாலும் திரையரங்கில் பார்க்கும் திருப்தியையும் மகிழ்வையும் தராது என்று கருத்துக்களை தெரிவித்தும் வருகின்றனர்.

இளம் இயக்குனரை சந்தித்த விஜய்; இயக்குனர் யாரென அறிந்ததும் அய்யயோ… என கதறும் ரசிகர்கள்;

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *