இளம் இயக்குனரை சந்தித்த விஜய்; இயக்குனர் யாரென அறிந்ததும் அய்யயோ… என கதறும் ரசிகர்கள்;

சமீபத்தில் அதிக வசூல் செய்து கோலிவுட் பாக்ஸ் ஆபிஸை தெறிக்கவிடும் பட்டியலில் விஜய்க்கு முதல் இடத்தையே கொடுக்கலாம். எனினும், விமர்சன ரீதியாகவும் ரசிகர்களிடத்திலும் சற்று கவலையான நிலையிலேயே தளபதி விஜயின் படங்கள் உள்ளது.

கடைசியாக சூப்பர் டூப்பர் ஹிட் என்றால் 2012ல் வெளியான துப்பாக்கி தான். அதன் பின் ஓரளவு திருப்தி செய்த படங்கள் கத்தி, தெறி, மெர்சல். ஆனால், இம்மூன்றுக்கும் பெரும் சோதனையே வந்தது. கத்தி படம் வேறொருவரின் கதை. தெறி (சத்ரியன்) படத்தின் ரீமேக். மெர்சல் (அபூர்வ சகோதரர்கள்) ரீமேக் என்றும் பல விமர்சனங்களுக்கிடையில் சிக்கித் தவித்தது.

கிட்டத்தட்ட ஹிட் கொடுத்து 10 ஆண்டுகள் ஆனா நிலையில். தமிழ் இயக்குனரை நம்பாமல் தெலுங்கு இயக்குனரின் “வாரிசு” ஆனார் விஜய். அப்படத்தை பெரிதாக எதிர்பார்த்த ரசிகர்களுக்கும் சோகம் தான் மிஞ்சியது. காரணம் “வாரிசு” திரைப்படம் 2008ல் வெளியான “Lacro Winch” படத்தின் கதையாக கூட இருக்கலாம் என பலர் விமர்சித்தது தான்.

தற்போது, டான் படத்தின் இயக்குனர் சிபி சக்கரவர்த்தியை சந்தித்து எனக்காக ஒரு கதையை எழுதும் படி விஜய் கேட்டுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதையறிந்த ரசிகர்கள் அதிர்ச்சியிலும், சோகத்திலும் உள்ளனர். ஏனென்றால், இவர் இயக்கிய டான் படமோ 3 மணி நேரம் என்றாலும். படத்தின் வெற்றியை நிர்ணயித்தது இறுதி 30 நிமிடத்தில் வரும் “SHORT FILM” தான். அதற்கு முன் உள்ள படம் அனைத்தும் வீண் என்று ரசிகர்களே தெரிவித்தது பலரும் அறிந்ததே.

அதனால் இவர் விஜயை வைத்து இயக்கவுள்ள படத்தில் இரண்டாம் பாதி படத்தை பார்த்தால் போதும் என்று சிலர் எள்ளி நகையாடி வருகின்றனர். மேலும், இது உண்மையாக இருந்தால் தளபதி 68 படத்தை இயக்கம் போட்டியில் சிபி சக்கரவர்த்தியும் இணைந்துள்ளாரா? என்று கேள்வி எழுந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *