யூட்யூப் ட்ரெண்டிங்கில் இருக்கும் ‘கே ஜி எஃப் 2’ பட பாடல் : இணையதளத்தை கலக்கும் ‘தூஃபான்’

முன்னணி நடிகர் யஷ் நடிக்கும் ‘கே ஜி எஃப் ‘ படத்தின் இரண்டாம் பாகத்தில் இடம்பெற்ற ‘தூஃபான்..’ பாடல் வெளியாகி இணையத்தில் சாதனை படைத்து வருகிறது.

ஹோம்பாலே பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘கே ஜி எஃப் 2’. இப்படத்தின் முதல் பாகம் வெளியாகி, இந்திய அளவில் வசூலை வாரி குவித்தது. இதனையடுத்து ‘கே ஜி எஃப் 2’ திரைப்படம், எதிர்வரும் ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதியன்று வெளியாகிறது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இப்படத்தை, ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு தமிழகம் முழுவதும் வெளியிடுகிறார்..

இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் தயாராகி வரும் ‘கே ஜி எஃப் 2’ படத்தில் கதையின் நாயகனாக ராக் ஸ்டார் யஷ் நடித்திருக்கிறார். இவருடன் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், ரவீணா டண்டன், பிரகாஷ் ராஜ், மாளவிகா அவினாஷ், ஸ்ரீநிதி ஷெட்டி, அச்சுத் குமார், ராவ் ரமேஷ், ஈஸ்வரி ராவ், ராமச்சந்திர ராஜு, ஜான் கொக்கேன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். புவன் கௌடா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு ரவி பர்சூர் இசை அமைத்திருக்கிறார்.

இந்தப்படத்தில் பாடலாசிரியர் மதுரகவி எழுதி, ‘ தூஃபான்’ என தொடங்கும் பாடல் இணையத்தில் வெளியானது. வெளியான குறுகிய தருணங்களில் யூடியூப் இணையதளத்தில், ‘மியூசிக்’ பிரிவில் முதலிடத்தைப் பெற்று, ட்ரெண்டிங்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த பாடலில் ‘ராக்ஸ்டார்’ யஷ்ஷின் தோற்றமும், பாடகர்களின் உணர்ச்சிகரமான குரல்களும் ரசிகர்களை கவர்ந்திருக்கிறது.

‘கே ஜி எஃப்’ படத்தின் முதல் பாகத்தை போலவே பிரமாண்டமான காட்சி அமைப்பின் பின்னணியில் ‘தூஃபான்..’ பாடல் இடம்பெற்றிருப்பதால், இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு எகிறி இருக்கிறது.

தூஃபான் பாடலை பார்க்க கீழுள்ள லிங்கை கிளிக் செய்யவும்…

தமிழ் : http://youtu.be/8JumUZyzXP8

கன்னடம் : http://youtu.be/unWilzY7pSw
தெலுங்கு : http://youtu.be/xUe3eROn380
மலையாளம் : http://youtu.be/D_JIlg5WOWI

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *