சீனு ராமசாமி இயக்கத்தில் நான்காவது முறையாக விஜய் சேதுபதி நடித்துள்ள படம் ‘மாமனிதன்’. சீனு ராமசாமியுடன் தொடர்ந்து பணியாற்றி வரும் யுவன் ஷங்கர் ராஜா இந்தப்படத்தை தயாரித்துள்ளார். மேலும் முதன்முறையாக இசைஞானி இளையராஜாவும், யுவன் ஷங்கர் ராஜாவும் இணைந்து இந்த படத்திற்கு இசையமைத்துள்ளனர்.
விஜய் சேதுபதி, காயத்ரி நடித்திருக்கும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் குரு சோமசுந்தரம் நடித்துள்ளார். 2019 ஆம் ஆண்டே இந்தப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து இருந்தாலும், படத்தின் வெளியீட்டு தேதி தொடர்ந்து தள்ளிபோய் கொண்டே இருந்தது. அண்மையில் இந்தப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிளாக ‘தட்டிப்புட்டா தட்டிப்புட்டா’ பாடல் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் இந்தப்படத்தின் தமிழக மற்றும் கேரள திரையரங்க விநியோக உரிமையை ஆர்.கே. சுரேஷ் கைப்பற்றினார். இதனையயடுத்து ‘மாமனிதன்’ படம் மே 6 ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக நேற்று அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது ரிலீஸில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
அதன்படி ‘மாமனிதன்’ படம் மே 20 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மே 6 ஆம் தேதி இயக்குனர் பாலா தயாரிப்பில் ஆர்.கே. சுரேஷ் நடித்துள்ள விசித்திரன் படம் ரிலீஸ் ஆகும் எனவும் கூறப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக ‘மாமனிதன்’ படம் தள்ளி போவது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விஜய் சேதுபதி இந்த படத்தில் ஆட்டோ டிரைவராக இரண்டு குழந்தைகளுக்கு அப்பாவாக நடித்துள்ளார். சீனு ராமசாமி ஸ்டைலில் குடும்ப திரைப்படமாக ‘மாமனிதன்’ படம் உருவாகியுள்ளது. சீனு ராமசாமி தற்போது ஜிவி பிரகாஷ் நடிப்பில் ‘இடிமுழக்கம்’ படத்தை இயக்கியுள்ளார். இதன் படப்பிடிப்பு அண்மையில் நிறைவடைந்தது குறிப்பிடத்தக்கது.
https://twitter.com/seenuramasamy/status/1506452139647721481?s=21