தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவ விசாரணை கமிஷனுக்கு தான் நேரிடையாக வந்தால் ரசிகர்கள் கூடுவார்கள். சட்டம் ஒழுங்கு கெடும் என்பதால் தனக்கு விலக்கு அளிக்க கேட்டார் ரஜினி.
இதுகுறித்து சீமான் பதிலடி கொடுத்துள்ளர்.
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் கோர்ட்டு விசாரணைக்கு வந்தால் ரசிகர்கள் கூடுவார்கள். சட்டம் ஒழுங்கு கெடும் என்கிறார் ரஜினி.
மக்கள் போராட்டத்தில சமூகவிரோதிகள் ஊடுருவி விட்டார்கள் என்று சொல்லும்போது போக முடிகிற உங்களால் இப்போது போக முடியாதா.
சட்டம் ஒழுங்கு பிரச்சினை வரும் என்றால் உங்கள் ரசிகர்கள் யார்? இதற்கு ரஜினிகாந்த் பதில் சொல்ல வேண்டும். என்றார் சீமான்.
வருமான வரித்துறை ரஜினிகாந்துக்கு ரூபாய் 66 லட்சம் விலக்கு அளித்தது. அதே வழக்குதானே சசிகலாவுக்கும்.
சசிகலாவுக்கு ஒரு நீதி, ரஜினிகாந்துக்கு ஒரு நீதி. அவருக்கு தண்டனை. இவருக்கு சலுகையா? என்று பேசினார் சீமான்.
Thoothukudi violence issue Seeman slams Rajini for seeks exemption