சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்ட தலைவர்169ன் டைட்டில்

நேற்று(16 ஜூன்) மாலை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் எந்த ஒரு நடிகரின் பெயரோ அல்லது ஹாஷ்டேக் எதையும் பதிவிடாமல் சிகப்பு நிற நட்சத்திரத்தை மட்டுமே வைத்து நாளை (17 ஜூன்) 11 மணிக்கு அப்டேட் என்று பதிவிட்டிருந்தனர். அந்த பதிவு 41 ஆயிரம் லைக்குகளை கடந்து இணையத்தையே அதிரவிட்டது.

எதற்காக இந்த பதிவு?

இந்த பதிவு நெல்சன் இயக்கத்தில் உருவாகிவரும் #தலைவர்169 என்று பெயரிடப்படாத ரஜினியின் படத்தின் டைட்டில் அறிவிப்பாக இருக்கலாம் என்று இணையத்தில் ரஜினியின் ரசிகர்கள் பதிவு செய்து வருகின்றனர்.

இது ஒருபுறம் இருக்க அந்த பதிவு சியான் விக்ரம் நடிப்பில் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கவுள்ள படத்தின் அறிவிப்பாக கூட இருக்கலாம் என்று ட்விட்டர் குருவிகள் கூவுகின்றனர்.

மேலும், இது திருச்சிற்றம்பலம் படத்தின் தெலுங்கு மொழி போஸ்டராக கூட இருக்கலாம் என்றும் தனுஷ் ரசிகர்களால் பேசப்பட்டு வருகிறது.

சன் பிக்சர்ஸ் வெளியிட்ட அறிவிப்பு

இதனை தொடர்ந்து, தற்போது சன் பிக்சர்ஸ் வெளியிட்ட அப்டேட் நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள ரஜினி நடிக்கும் தலைவர் 169 படத்தின் டைட்டிலை வெளியிட்டுள்ளனர். அதில் அரிவாள் ஒன்றில் ரத்தக்கறை படித்தபடி முழுமையான ஆக்ஷன் படமாக இருக்கும் என்பதை குறிக்கும் வகையில் உள்ளது. மேலும், அப்படத்தின் பெயர் ஜெயிலர் என்று வெளியிட்டுள்ளது சன் பிக்சர்ஸ் நிறுவனம்.

இது வரை, பல சாதனைகளை செய்துள்ள சூப்பர் ஸ்டார் படத்தின் அப்டேட்களை ஜெயிலர் படம் முறியடிக்குமா? என்பது ரசிகர்கள் கையில் தான் உள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *