ஸ்டார் விஜய் பிரத்யேகமாக ‘விஜய் டக்கர்’ எனும் இளைஞர்களுக்கான பொழுதுபோக்கு சேனலை தொடங்க உள்ளனர்!!

 

ஸ்டார் விஜய் தமிழில் இளைஞர்களுக்கான பொழுதுபோக்கு சேனலை தொடங்குகிறது. இது குறித்து வெளியான பரபரப்பான டீசரைத் தொடர்ந்து, மிக அட்டகாசமான ப்ரமோ ஸ்டார் விஜய் மற்றும் அதன் சமூகக் வலைத்தள பக்கங்களில் வெளியிடப்பட்டுள்ளது.
‘விஜய் டக்கர்’ தமிழக மண்ணின் இளைஞர்களை கவரும் வகையிலான பல அட்டகாசமான உள்ளடக்கத்தை கொண்டிருக்கும். புதிய இளமை எனும் டேக் லைனுடன்  இளைஞர்களுக்கான புதிய சேனலாக இது வருகிறது.

விஜய் டக்கர் – ‘இனி இதுதான் ட்ரெண்ட் செட்டர்’

விஜய் டக்கர் சேனல் இன்றைய இளைஞர்களுக்கான ஒரு பொழுது போக்கு பிராண்டாக  இருக்கும். பொழுதுபோக்கு துறையில் டிரெண்ட்செட்டராக செயல்படும் சேனலாக இது இருக்கும். அதற்கு ‘விஜய் டக்கர் – இனி இதுதான் ட்ரெண்ட் செட்டர்’ என்ற டேக்லைன் மிகப் பொருத்தமானதாக இருக்கும்.

‘விஜய் டக்கர்’  Non Fiction வகையில், திரைப்படங்கள் மற்றும் இசை என இளைஞர்களுக்கான  முழுக்கலவையை  கொண்டுள்ளது. Non Fiction வகையில் இன்றைய இளைஞர்களின் வாழ்வை பிரதிபலிக்கும் வகையில், தினமும் தொடர்ச்சியாக பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளைக் ஒளிப்பரப்பவுள்ளது.

விஜய் டக்கர் பின்வரும் நிகழ்ச்சிகளைக் கொண்டிருக்கும்:

காலேஜ் டா – தமிழகத்தின் 2k கிட் என்று அழைக்கப்படும் புது தலைமுறை gen z குழந்தைகளின் கல்லூரி வளாகத்தில் அவர்களின் வாழ்வை காட்சிபடுத்தும் நிகழ்ச்சி.

சினிமா காரம் காஃபி – ஒரு கபேயில் 3 இளைஞர்களுடன் ஒரு நகைச்சுவையான அரட்டை நிகழ்ச்சி,  சமூகத்தின் அனைத்து நிகழ்வுகளையும் கிசுகிசுக்கும் ஒரு  நிகழ்ச்சி.

டிரக் மேல லக்கு – முழுத்திரை கொண்ட ஒரு  விளையாட்டு டிரக்கில்  அசத்தும் பொழுதுபோக்குடன் அற்புதமான கேம் ஷோ
ஸ்டைல் ஸ்டைல் தான் – மேக்கப் மேன், மேக்கப் கலைஞர் மற்றும் பேஷன் போட்டோகிராபர் ஆகியோர் இணைந்து சாதாரண பொது மக்களை அழகுப்படுத்தும் அழகான நிகழ்ச்சி.

ஸ்டாருடன் ஒரு நாள் – தங்கள் வீடு, நண்பர்கள், குடும்பம் மற்றும் பொழுதுபோக்குகளை உள்ளடக்கிய பிரபலங்களின் வாழ்க்கையில் ஒரு நாளை புகுந்து காணும் ஒரு மாறுபட்ட பொழுதுபோக்கு நிகழ்ச்சி.

சம்திங் சம்திங் – ஒரு டேட்டிங் ஷோ, ஒவ்வொரு வாரமும் பொதுமக்களில் சிலர் தங்களுக்கு சரியான பொருத்தத்தை தேடி அடையும் நிகழ்ச்சி.

மேற்கண்ட நிகழ்ச்சிகள் அனைத்தும் தமிழ் இளைஞர்களின் வாழ்க்கை முறையை ஒட்டி உருவாக்கப்பட்டது. கவர்ச்சியான மற்றும் மனதை ஈர்க்கும் கேம் ஷோக்கள் தவிர, தமிழ்நாட்டின் வேறு எந்தச் சேனலும் வழங்காத உள்ளடக்கத்தை இந்த சேனல் வழங்கும்.  இசை மற்றும் திரைப்படங்களையும் இந்த சேனல் கொண்டிருக்கும். கற்பனை செய்து பார்க்க முடியாத வேடிக்கை மற்றும் பொழுதுபோக்குடன் பார்வையாளர்களுக்கு பல வகை நிகழ்ச்சிகளை வழங்க  விஜய் டக்கர் தயாராக உள்ளது. இது நிச்சயமாக இளைஞர்களின் இதயங்களை கவரும் வகையில் இருக்கும்.

இந்த சேனலின் நிகழ்ச்சிகள் பார்வையாளர்களுடன் உரையாடும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. பல்வேறு வகையான உள்ளடக்கங்களுடன் விஜய் டக்கர், இளைஞர்களின் இதயங்களை நிச்சயமாகக் கைப்பற்றும் அற்புதமான புதுமையான நிகழ்ச்சிகளின் தொகுப்பாக இது இருக்கும். விஜய் டக்கர் முன்னெப்போதும் இல்லாத வகையில், இளைஞர்களுக்கான சிறப்பான பொழுது போக்கை வழங்கும் ஒரு உற்சாக மிக்க சேனலாக இருக்கும். வரம்பற்ற பொழுதுபோக்குடன் விரைவில் தொடங்கவுள்ளது விஜய் டக்கர் சேனல் !  விஜய் டக்கரின் சேனல் பார்ட்னர்கள் Prithvi Women’s Inner wear, RMKV Unique silks மற்றும்  Viking Premium Banians & briefs.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *