தற்போது தமிழ், ஹிந்தி, மலையாளம் என மிகவும் பிசியாக நடித்து வருபவர் நடிகர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. தற்போது உலகநாயனுடன் இவர் நடித்த விக்ரம் திரைப்படம் ஜூன் 3ஆம் தேதி வெளியாகவுள்ளது. வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி மற்றும் விஜய் சேதுபதி நடிக்கும் “விடுதலை” திரைப்படம் மக்கள் மத்தியில் அதீத எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இவர் சமீபத்தில் நடித்த பெரும்பாலான படங்கள் கல்லாகட்ட தவறி வருகிறது.
ஆனால், கோலிவுட்டின் வசூல் நாயனாக வலம்வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். சமீபத்தில் வெளியான இவர் நடித்த டாக்டர் மற்றும் டான் ஆகிய படங்கள் பாக்ஸ் ஆபிஸை குவித்தது. அதானல், சிவகார்த்திகேயனை பார்த்து கற்றுக் கொள்ளுங்கள் விஜய் சேதுபதி என்று பலர் இவருக்கு அறிவுரை கூறி வருகின்றனர்.
அடுத்ததாக சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் ஜூன் 24ஆம் தேதி வெளியாகவிருக்கும் “மாமனிதன்” திரைப்படம் இவருக்கு ஒரு புதிய ஒரு துவக்கத்தை தருமா என்று காத்திருந்து பார்க்க வேண்டும்.