ரசிகர்களால் முதலிடத்திற்கு தள்ளப்பட்ட விக்ரம் திரைப்படம்

மாநகரம் படத்தின் மூலம் பிரபலமானவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். அதன் பின், கைதி, மாஸ்டர் போன்ற வெற்றி படங்களை இயக்கிய இவர். தற்போது, உலக நாயகன் கமல் ஹாசன், விஜய் சேதுபதி, பஹத் பாசில் மற்றும் பலரின் நடிப்பில் உருவான விக்ரம் படத்தை இயக்கியுள்ளார்.

RKFI நிறுவனம் தயாரிக்கும் இப்படம் வருகின்ற ஜூன் 3ஆம் தேதி வெளியாகவிருக்கும் நிலையில் இப்படத்தின் ப்ரோமோஷனுக்காக உலகநாயகன் கமல் பலமாநிலங்களுக்கும், சில நாடுகளுக்கும் சென்று தீவிரமாக விளம்பரம் செய்து வருகிறார்.

இந்நிலையில் IMDB இணையத்தளத்தில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களின் பட்டியலில் கமலின் “விக்ரம்” திரைப்படம் முதல் இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது. மேலும், இப்படம் முன்பதிவிலும் சாதனை படைக்க வாய்ப்புள்ளது போல் தெரிகிறது.

நடிகர் சூர்யா சிறப்பு கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தை ரெட் ஜெயிண்ட்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *