ஆர்.எஸ்.கணேசன் பாடிய கொரோனா விழிப்புணர்வு பாடல்

கொரோனா:-
மனித உயிர்களை ஊசலாட விட்ட கிருமி ரூபத்தில் வந்த எமன், நொந்து கிடக்கும் மனித இனத்தை நோயிலிருந்து காத்துக்கொள்ள ஒரு விழிப்புணர்வு பிரச்சாரமே இந்தப் பாடல். “மானிடா கவனமே கொள்ளடா” என்ற இந்த பாடல் கொரோனாவின் அச்சம் தவிர்க்க, மிகுந்த தன்னம்பிக்கை நிறைந்த வரிகளும், அதற்கான மெட்டும், உணர்ச்சியூட்டும் இசை சேர்பும், இரண்டும் கலந்து கொரோனவின் மருந்தாய், கேட்டவரின் காதுகளில் பாயும் இந்தப் பாடலுக்கு இசை அமைத்து பாடியவர் R.S. கணேஷ் நாராயண்.
“மனதில் ஆயிரம் ஆசைகள் உண்டு” என்ற பாடல் கொரோனாவின் வீரியத்தை அறிய மக்களின் புரிதலின் உச்சத்திற்கு கொண்டு செல்லும் என்பது நிச்சயம். மனிதனை பதம் பார்க்க வந்த இந்த கொரோநாவை, மனிதனே பதம் பார்க்கத் தூண்டும் ஒரு தூண்டில் இந்தப் பாடல். அற்புதமான மெட்டுக்கு மெல்லிய இசை சேர்ப்பில் மெய்சிலிர்க்க வைக்கும் இந்தப் பாடல். இந்தப் பாடலை R.S.Ganesh Narayan இசையில், அற்புதமாக பாடியவர் “ரமணி சுந்தரேசன்”. இந்த இரண்டு பாடல்களையும் எழுதியவர், “தர்மபுரி சோமு”. இந்த இரண்டு பாடலுக்கு கேமரா கையாண்டவர் முத்தமிழன்.
இதை R.S.G மீடியா புரோடக்சன் சார்பாக வழங்கியவர் “ஆர்.எஸ்.கணேஷ் நாராயண்”. இவர் கர்நாடகாவில் 45 கன்னட படங்களுக்கு இசை அமைத்துள்ளார். இவர் தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்தவர். இவர் நடிகை “குட்டி ராதிகா” நடித்துள்ள “தமயந்தி” என்ற தமிழ் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

மானிடா கவனமே கொல்லடா பாடல் 5 மொழிகளில் உருவாகியுள்ளது
தமிழ் ஹிந்தி தெலுங்கு கன்னடம் மலையாளம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *