விஜய் பாடிய ‘ஒரு குட்டி கதை’ பாடல் வெளியானது

மாஸ்டர் படத்தில் தளபதி விஜய் பாடிய “ஒரு குட்டி கதை ” பாடல் வெளியானது !

மாஸ்டர் திரைப்படத்தை XB பிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனம் சார்பில் சேவியர் பிரிட்டோ தயாரிக்கிறார். லோகேஷ் கனகராஜ்  இயக்குகிறார். ராக்ஸ்டார் அனிரூத்  இசையமைக்கிறார். சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்ய  படத்தொகுப்பினை பிலோமின் ராஜ்  கவனிக்கிறார்.

தளபதி விஜய்க்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகனன் முதன்முறையாக இப்படத்தில் இணைந்து நடிக்கிறார்.

இப்படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, சாந்தனு, அர்ஜுன் தாஸ், அழகன் பெருமாள், ரம்யா சுப்ரமணியன், கௌரி கிஷான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில்  நடிக்கிறார்கள்.

அனிரூத் இசையில் தளபதி விஜய் குரலில் “ஒரு குட்டி கதை” என தொடங்கும் பாடலை தளபதி விஜய் பாடியுள்ளார், இந்த பாடலுக்கு அருண் ராஜா காமராஜ் வரிகளை எழுதியுள்ளார். பிப்ரவரி 14 ஆம் தேதியான இன்று மாலை 5 மணிக்கு இப்பாடலின் வரிகள் வீடியோவை படக் குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

இதற்கு முன்பு கத்தி படத்தில் அனிருத் இசையில் ‘செல்ஃபி புள்ள’ பாடலை தளபதி விஜய் பாடியது குறிப்பிடத்தக்கது.

மாஸ்டர் 2020  ஏப்ரல் மாதம் திரையிட திட்டமிட்டுள்ளனர்.

தொழில்நுட்பக்குழு :
எழுத்து & இயக்கம் : லோகேஷ் கனகராஜ்
தயாரிப்பு : சேவியர் பிரிட்டோ ( XB பிலிம் கிரியேட்டர்ஸ்)
இசை – அனிரூத்
வசனம் – லோகேஷ் கனகராஜ் ,ரத்ன குமார் , பொன் பார்த்திபன்
ஒளிப்பதிவு – சத்யன் சூரியன்
படத்தொகுப்பு – பிலோமின் ராஜ்
லைன் புரொடியூசர்ஸ்-  லலித் – ஜெகதீஷ் ,
நிர்வாக தயாரிப்பு – R .உதயகுமார்
சண்டை பயிற்சி – ஸ்டண்ட் சில்வா
விளம்பர வடிவமைப்பு – கோபி பிரசன்னா
ஆடை வடிவமைப்பு – பல்லவி சிங்
நடனம் – தினேஷ் , சதிஷ்

மக்கள் தொடர்பு – ரியாஸ் கே அஹ்மத்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *