நான் கடவுள் இல்லை விமர்சனம்

எஸ்.எ.சந்திரசேகர் இயக்கத்தில் சமுத்திரக்கனி, இனியா, சாக்ஷி அகர்வால் நடிப்பில் உருவாகியுள்ள படம் “நான் கடவுள் இல்லை”.

கதைப்படி,

சமுத்ரகனியின் தந்தையை வெட்டி கொன்றுவிடுகிறார் சரவணன். அவரை பிடித்து ஆயுள் தண்டனையை வாங்கித் தருகிறார் சமுத்திரக்கனி. 2 ஆண்டுகளில் ஜெயிலில் சுவரேறி, ஏணி போட்டு தப்பிக்கும் சரவணன். சமுத்ரகனியின் குடும்பத்தை பழி வாங்க நினைக்கிறார்.

ஆனால், சமுத்திரக்கனி 2 வருடத்தில் CBCID லெவலுக்கு புரொமோஷன் பெற்று போலீஸ் பாதுகாப்புடன் வீட்டில் வசித்து வர அவரை நெருங்க சரவணனுக்கு கடினமாக இருப்பதால். அவரின் வழக்கில் வாதாடிய வக்கீல் மற்றும் தீர்ப்பு வழங்கிய நீதிபதி குடும்பத்தை இஷ்டம் போல் வெட்டி கொலை செய்கிறார்.

சரவணன் எந்த அளவிற்கு பெரிய ரவுடி என்றால், நினைத்த நேரமெல்லாம் யாரை வேண்டுமானாலும் அரிவாளால் வெட்டியும். துப்பாக்கியால் சுட்டு கொலை செய்தும் ஜாலியாக இருக்கும் அளவிற்கு பெரிய தாதா.

இது ஒரு கதையாக வளம் வர, சம்பந்தமே இல்லாமல் வருகிறது எஸ்.எ.சி-யின் கதை. ஆம், காரில் இவர் பயணித்து கொண்டிருக்கும் போது. சிறுமி ஒருவர் கடவுளுக்கு கடிதம் எழுதுவதை பார்த்து அந்த கடிதத்தில் இருக்கும் ஆசையை நிறைவேற்றி வைப்பது எஸ்.எ.சி-யின் வேலை.

கடவுளுக்கு யார் லெட்டர் போட்டாலும் அது எஸ்.எ.சி வீட்டுக்கு வரும் படி அவர் செட் பண்ணி வைத்துள்ளார்.

இது இரு கதைகளும் எந்த இடத்தில் சேர்கிறது. என்பது மீதிக்கதை…

மிடுக்கான ஒரு அதிகாரியாக வந்து செல்கிறாரே தவிர, நடிப்புக்கென இப்படத்தில் அவருக்கு பெரிதாக வேலை இல்லை.

இனியா நடிப்பு ஓகே. சமுத்ரகனியின் மகள் கதாபாத்திரத்தில் நடித்த பெண் நன்றாக நடித்துள்ளார்.

சாக்ஷி அகர்வாலுக்கு அதிகப்படியான சண்டை காட்சிகளை கொடுத்துள்ளார் எஸ்.எ.சி. ஆக்ஷனில் அதகள படுத்தியுள்ளார் சாக்ஷி.

எஸ்.எ.சி-யின் 80 வது படம் இது. 80 படங்கள் இயக்கியும், டெக்கனிகளாக அவர் இன்னும் அப்கிரேட் ஆகவில்லையே என்பது தான் வருத்தம்.