படப்பிடிப்பில் காயமடைந்த அருண் விஜய்; கேரளாவில் சிகிச்சை;

 

அஜித் நடிப்பில் கடந்த 2007-ம் ஆண்டு வெளியான ‘கிரீடம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு இயக்குனராக அறிமுகமாவனர் ஏ.எல்.விஜய். அதன்பின்னர் மதராசப்பட்டினம், தெய்வ திருமகள், தாண்டவம் உள்ளிட்ட பல படங்களை இயக்கி அனைவரையும் கவர்ந்தார். தற்போது இவர் அருண் விஜய் நடிக்கும் ‘அச்சம் என்பது இல்லையே’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் கதாநாயகியாக எமி ஜாக்சன் நடிக்க ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார்.

முட்டிற்கு சிகிச்சை எடுக்கும் அருண்விஜய் சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பில் நடிகர் அருண் விஜய்க்கு காயம் ஏற்பட்டது. இந்நிலையில், இவர் கேரளாவில் சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். இது தொடர்பான புகைப்படத்தை தனது சமூக வலைதளப்பக்கத்தில் பகிர்ந்துள்ள நடிகர் அருண் விஜய் “காயம் ஏற்பட்ட என் முட்டிற்கு ஆயுர்வேத முறையில் சிகிச்சை எடுத்து வருகிறேன்.. இது என்னுடைய நான்காவது நாள் சிகிச்சை.. விரைவில் படப்பிடிப்பில் கலந்து கொள்வேன்” என்று பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *