பிக் பாஸ் நிகழ்ச்சியில் வெளியாகவுள்ள படத்தின் அப்டேட்; ரசிகர்களுக்கு நாளை காத்திருக்கும் விருந்து;

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியின் மிகப் பிரபலமான ரியாலிட்டி ஷோ தான் இந்த பிக் பாஸ். 2017 ஆம் ஆண்டு தமிழில் ஒளிபரப்பப்பட்ட இந்த போட்டி மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது. இந்நிலையில், நாளை தொடங்கவுள்ள பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் தொடக்கவிழாவில் உலகநாயகன்.கமல் ஹாசன் தலைமையில் ஒரு படத்தின் அப்டேட் வெளியாகவுள்ளது.

அந்த அப்டேட், லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ள தளபதி விஜய்-ன், தளபதி67 படம் பற்றிய அறிவிப்பு என்றும். அப்படத்தை செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் எஸ்.எஸ்.லலித் குமார் தயாரிக்கவுள்ளார் என்றும் தகவல்கள் வந்துள்ளது. மேலும், அந்த படம் LCU வில் சம்பந்தப்பட்ட ஒரு படமாக இருக்கலாம் என்றும். அந்த படத்தில் சூர்யா நடிக்கவுள்ளார் என்றும் கூடுதல் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *