அனைவர் வாழ்விலும் வெளிச்சமும் வெற்றியும் பரவட்டும், நிலைக்கட்டும் – அபூபக்கர்

இருப்பவர்கள் இல்லாதவர்களுக்கு பரிசளித்து தீபாவளியைக் கொண்டாடுவோம் – அபூபக்கர்

இந்தியா முழுக்க பெரும்பாலான மக்கள் கொண்டாடும் பண்டிகை தீபாவளி! இந்துக்கள் மட்டுமல்லாது மற்ற மதத்தினரும் கொண்டாடும் வகையில் அமைந்திருக்கும் தீபாவளியை அனைவரும் எதிர்நோக்கி காத்திருக்கிறோம்.

கொரோனா அச்சம் காரணமாக ஏழு மாதங்களுக்கு மேலாக மிகப்பெரிய வருவாய் இழப்பையும் வீட்டுக்குள் முடங்கி தனிமையையும் பல்வேறு சோதனைகளையும் அனுபவித்த மக்களுக்கு இந்த தீபாவளி மிகப்பெரிய மனமகிழ்ச்சியை, உற்சாகத்தை அளிக்க கூடிய பண்டிகையாக அமைந்திருக்கிறது.

ஏறக்குறைய நாம் அனைவரும் இயல்பு நிலைக்கு திரும்பி இருக்கும் நேரத்தில் வந்திருக்கும் மிக பிரம்மாண்டமான பண்டிகை இதுவாகும். இந்த நேரத்தில் சாதி, மதம், இனம்,மொழி ஆகியவற்றை கடந்து அனைவரும் ஒற்றுமையுடன் மகிழ்ச்சியுடன் மனநிறைவுடன் மிகுந்த நம்பிக்கையுடன் தீபாவளியைக் கொண்டாடுவோம்.

தீமைகள், கவலைகள், சோதனைகள் எல்லாம் பட்டாசு புகையாய் மறைந்து அனைவர் வாழ்விலும் வெளிச்சமும் வெற்றியும் பரவட்டும், நிலைக்கட்டும். வேற்றுமைகள் மறைந்து ஒற்றுமை தழைத்தோங்கி நாம் அனைவரும் இந்தியர் என்ற ஒருமைப்பாட்டு உணர்வு தழைத்தோங்க வேண்டிய தருணம் இது.

இந்த தீபாவளி நன்னாளில் புத்தாடை அணிவதும், பட்டாசு வெடிப்பதும், இனிப்புகள் தயாரிப்பதும் நம் குடும்பம் என்ற எண்ணத்தோடு நின்றுவிட வேண்டாம் இருப்பவர்கள் இல்லாதவர்களுக்கு பரிசளித்து அனைவரும் தீபாவளியை மகிழ்ச்சியாகக் கொண்டாடுவதற்கான முயற்சிகளை முன்னெடுப்போம்.

இந்திய ஹஜ் அசோசியேஷன் சார்பில் அனைவருக்கும் மனமார்ந்த மகிழ்ச்சி நிறைந்த தீபாவளி நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு இந்திய ஹஜ் அசோஷியேஷன் தலைவர் பிரசிடெண்ட் அபூபக்கர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *