தோனி என்டர்டெய்ன்மென்ட் தயாரிப்பில் ரமேஷ் தமிழ்மணி இயக்கத்தில், இசையில் ஹரிஷ் கல்யாண், இவானா, நதியா, யோகி பாபு, RJ விஜய் நடித்துள்ள படம் தான் “LGM”.
கதைப்படி,
ஒரே நிறுவனத்தில் பணிபுரியும் ஹரீஷ் கல்யாண் மற்றும் இவானா இருவரும் காதலிக்கிறார்கள். ஆனால், அவர்களுக்குள் சில ஒப்பந்தம் உள்ளது. அதன்பின், இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவெடுக்கிறார்கள். ஹரிஷ் கல்யாணின் காதலுக்கு ஓகே சொல்கிறார் நதியா.
இருவீட்டாரும் சம்மதம் தெரிவித்தாலும், நதியாவுன் ஒரே வீட்டில் இருக்க இவானாவிற்கு விருப்பம் இல்லை. அதனால், நதியாவை பற்றி நன்கு தெரிந்து கொள்ள குடும்பமாக ட்ரீப் செல்ல முடிவெடுக்கிறார் இவானா.
அதற்காக, இவர்கள் கூர்க் செல்கின்றனர். அங்கு நதியா மற்றும் இவானா இருவரும் ஒருவரையொருவர் புரிந்து கொண்டனாரா.?? திருமணம் நடந்ததா? இல்லையா? என்பது மீதிக்கதை.
ஹரீஷ் கல்யாணுக்கும் இவானாவிற்கும் இடையேயான காதல் காட்சி ரசிக்க வைத்தது. குறிப்பாக, பாடல் காட்சிகள் அனைத்தும் சிறப்பு. “சாலான” பாடலின் காட்சியமைப்பு மிகவும் புதுமையாக ரசிக்க வைத்துள்ளது.
இவானாவின் நடிப்பு யதார்த்தமாக இருந்தது. மேலும், இக்காலத்தில் இருக்கும் பெண் எப்படி முடிவு எடுப்பாரோ அதே போல் தான் இருக்கிறது இவானாவின் பாத்திரம்.
படத்தின் முதல் பாதி அனைவருக்குமானதாக இருந்தாலும், இரண்டாம் பாதியை தன் வசம் வைத்துள்ளார் நதியா. எப்பவும் போல் கியூட்டான நடிப்பை கொடுத்து ரசிக்க வைத்துள்ளார் நதியா.
விஸ்வஜித் ஒளிப்பதிவு படத்திற்கு சற்று ஆறுதல், ரமேஷ் தமிழ்மணி இசையில் பாடல்கள் ஓகே என்றாலும், பின்னணி இசை கதையோடு பயணித்தது.
முதல் பாதியில் நம்மை கதையோடு பயணிக்க வைத்து கவர்ந்திழுத்திருக்கிறார் இயக்குனர் ரமேஷ் தமிழ்மணி. இண்டர்வல் காட்சி அற்புதம்.
இரண்டாம் பாதியில் யோகி பாபுவின் காமெடி ஒர்க் அவுட் ஆனதால் படத்திற்கு பெரும் பலமாக சேர்ந்துள்ளார் யோகி பாபு.
சில இடங்களில் தேவையில்லாத வசனங்கள் வைத்தது அக்காட்சியை முழுமையாக ரசிக்க முடியாமல் செய்துவிட்டது.
முகம் சுழிக்காமல், குழந்தைகள் என்ஜாய் செய்தும், இளசுகளுக்கு பல ஐடியாக்களை கொடுத்தும் அனைத்து வயதினரையும் கவர்ந்துள்ளது “LGM”.
எல் ஜி எம் – ரசிக்கலாம்.