காவேரி மருத்துவமனை, ரேடியல் ரோடு, தனது மேம்பட்ட காது மூக்கு தொண்டைப்பிரிவை துவக்குகிறது!

காவேரி மருத்துவமனை ரேடியல் ரோடின் சர்வதேச தரத்திற்கு இணையான விரிவான நோயறிதல் மற்றும் சிகிச்சைகளுக்கான மேம்பட்ட வசதிகளுடன் கூடிய அதிநவீன காது மூக்கு தொண்டை பிரிவு மெட்ராஸ் இஎன்டி ரிசர்ச் பவுண்டேஷன் நிர்வாக இயக்குனர் பத்மஸ்ரீ முனைவர் மருத்துவர் மோகன் காமேஸ்வரன் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது.

முனைவர் மோகன் காமேஸ்வரன் காவேரி மருத்துவமனை ரேடியல்ரோடின் காது மூக்கு தொண்டை பிரிவுக்கு வருகைதந்துருந்தப்பொழுது, ENT நோயாளிகளுக்கு மருத்துவமனைவழங்கிய மருத்துவ சேவை முனைப்புகள் மற்றும் உள்கட்டமைப்பை உயர்வாக பாராட்டி பேசினார். திறமையான மற்றும் உயர்தர மருத்துவவல்லுநர்களை வைத்திருப்பதன் மூலம், காவேரி மருத்துவமனை மற்றமருத்துவமனைகளை விட தனித்துவம் பெற்றுள்ளது, என்றுகுறிப்பிட்டார். மேலும், மருத்துவர்கள் மற்றும் கைவச உலகத்தரஉள்கட்டமைப்பின் கூட்டுறவால் காவேரி மருத்துவமனை புதுஉயரங்களை அடையும் என்று தீர்க்கமாகத் தெரிவித்தார்.

“ENT பிரிவின் சிறந்த மருத்துவர்களில் ஒருவரான டாக்டர் ஆனந்த் ராஜூ தலைமையில் எங்கள் ENT பிரிவு தொடங்கப்பட்டதை அறிவிப்பதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம்”, என்று காவேரி குழும மருத்துவமனைகளின் நிறுவனர் மற்றும் செயல் தலைவர் டாக்டர் எஸ் சந்திரகுமார் அவர்கள்  தெரிவித்தார். “மேலும்  இந்த பிரிவு, சமீபத்திய மருத்துவ தொழில் நுட்பங்களை கொண்டு உயர்தர ENT சிகிச்சையை வழங்கும் என்றும் திறமையான மருத்துவ நிபுணர்கள் மற்றும் மேம்பட்ட உள்கட்டமைப்பு ஆகியவற்றின் ஒருங்கிணைப்புடன், செவிப்புலன் மீட்புக்கான கோக்லியர் உள்வைப்புகள், தூக்கத்தில் மூச்சு திணறலுக்கான சிகிச்சை, மூச்சுக்குழாய் அடைப்புக்கு அறுவை சிகிச்சை, நுண் காது அறுவை சிகிச்சைகள் மற்றும் பல ENT சிகிச்சை வகைகள் மீது கவனம் செலுத்தும்”, என்று அறிவித்தார்.

புதிதாக தொடங்கப்பட்ட ENT பிரிவுடன், காவேரி மருத்துவமனை, ரேடியல் ரோடு, சிறந்த மருத்துவ சேவையை தொடர்ந்து  வழங்குவதில் கடமைப்பட்டுள்ளது.

சென்னை ரேடியல் ரோட்டிலுள்ள காவேரி மருத்துவமனை, ஒருமுன்னணி மருத்துவமனையாகும். நரம்பியல், இருதயவியல், இரைப்பை குடல், பெண்கள் மற்றும் குழந்தை நலம், எலும்பியல், மூட்டு புனரமைப்பு, சிறுநீரகவியல் முதலிய சிறப்புப் பிரிவுகளில், மேம்பட்ட மருத்துவமும், அறுவை சிகிச்சை வசதியும் வழங்குகின்றது. பிரத்தியேக நிபுணர்கள் குழு, 50+ கிரிட்டிக்கல் கேர் படுக்கைகள், 20+ NICU படுக்கைகள், 7+ ஆபரேஷன் தியேட்டர்கள், மேம்பட்ட கேத்லேப்கள், 3T MRI மற்றும் 4K + 3D நரம்பியல்

நுண்ணோக்கி, உறுப்பு மாற்று சிகிச்சை வசதிகள், 24/7 டயாலிசிஸ்பிரிவு போன்ற அதி நவீன வசதிகள் மூலம் உலகத்தரம் வாய்ந்தமருத்துவ சேவையை, உலகம் முழுவதும் உள்ள நோயாளிகளுக்குவழங்குகின்றது.