கரு.பழனியப்பன், சௌந்தரராஜன், நமோ நாராயணன் நடிப்பில், எழுத்தாளர் சந்திரா தங்கராஜ் இயக்கத்தில், மதியழகன் தயாரிப்பில் உருவாகி இன்று 18ம் தேதி வெளியாகும் படம் ‘கள்ளன்’.
இந்த படத்தின் டைட்டில் ‘கள்ளன்’ கள்ளர் சமுதாயத்தை குறிப்பிடுவதாக கள்ளர் ஜாதியை சேர்ந்தவர்கள் இந்த படத்தை வெளியிட தடையாக இருக்கின்றனர்.
இதுகுறித்து இன்று காலை இயக்குனர் சந்திரா தயாரிப்பாளர் மதியழகன் பத்திரிகையாளர் சந்திப்பில் உருக்கமாக பேசினர்.
தயாரிப்பாளர் மதியழகன் பேசியதாவது
எங்களுக்கு ஒவ்வொரு மாநிலத்திற்கும் எந்த ஜாதி படம் எடுக்கலாம், எடுக்க கூடாதுனு நீங்க ஓரு புத்தகம் போட்டு குடுத்துடுங்க.
நான் அவ்வளவு சிரமப்பட்டு கிட்ட தட்ட இன்று அதிகாலை வரை கஷ்டப்பட்டு தான் இந்த படத்தை இன்று ரிலீஸ் செய்தேன்.
திருச்சி, மதுரை,தேனி மாவட்டங்களில் திரையரங்கின் ஸ்கிரீன் கிழிக்க பட்டு அதை வாட்ஸாப் ஸ்டேட்ஸில் வைத்து மகிழ்கிறார்கள். ‘நான் எத்தனை திரையரங்கில் படத்தை நிறுத்திவிட்டேன் என்று பாருங்கள்’ என பதிவு செய்திருக்கிறார்கள்.
குறிப்பிட்ட கவுன்சிலர்கள் படத்தை பார்த்தப் பிறகும் சம்பந்தப்பட்ட ஜாதிக்காரர்கள் திரையரங்குகளுக்கு மிரட்டல் விடுத்து படத்தை ரிலீஸ் செய்ய எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.
நேற்றுவரை 180 திரையரங்குகள் எங்கள் படத்தை திரையிட ஒப்பந்தம் செய்தனர், ஆனால் தற்போது 75 திரையில் தான் படம் ஓடுகிறது. மேலும் சில திரையரங்குகள் எங்கள் படத்தை திரையிட மறுக்கின்றனர்.
நாங்கள் அந்த ஜாதியை சேர்ந்தவர் கேட்ட படி கடிதமும் கொடுத்துள்ளோம். ஆனாலும் அவர்கள் படத்தை வெளியிட அனுமதிக்கவில்லை.
தயாரிப்பாளர் சங்கத்தில் பொறுப்பில் இருக்கவர்களுக்கும் இந்த விஷயத்திற்கு குரல் கொடுக்க தயாராக இல்லை, அவர்கள் குறிப்பிட்ட ஜாதியினரை பகைத்துக்கொள்ள தயாராக இல்லை.
இரவு 11 மணிவரை அவர்கள் பெரிய அளவில் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை ஆனால், இரவு 2 மணிக்கு தான் மீண்டும் அவர்கள் மீண்டும் மிரட்டல் விடுத்தார்கள்.
இதற்கு முன்னதாக சட்ட ரீதியாக நங்கள் ஒரு குற்றசாட்டை விவாதித்து ஜெயித்து வந்தோம். ஆனாலும் மீண்டும் பிரச்சனை கிளம்பியது.
இயக்குனர் சந்திரா பேசியதாவது,
கள்ளர் ஜாதியை சேர்ந்தவர்கள் தான் எங்களுக்கு மிரட்டல் கொடுக்கிறார்கள், என்னுடைய புகைப்படத்தை எடிட்டிங் செய்து ஆபாசமாக வெளியிடுகிறார்கள்.
முக்கியமாக ‘வாண்டையார்’ என்னும் நபர் தான் என்னுடைய தொலைபேசி என்னை கள்ளர் சமுதாயத்திற்கு கொடுத்துள்ளார்.
தமிழக முதலமைச்சருக்கு ஒரு வேண்டுகோள், இந்த செயலுக்கு நீங்கள் தக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் தமிழகம் மீண்டும் ஜாதி வெறி பிடித்த மாநிலமாக தான் மாறும்.
18 வருடங்களாக நான் உழைத்த உழைப்பு வீண் போனது. எனது சொந்த ஊரில் கூட இந்த படம் திரையிட படவில்லை.
ஒரு சிலர் என்னை தொடர்புகொண்டார்கள் ஆனால் நாங்கள் நான் சொன்ன கருத்துக்களை அவர்கள் ஏற்றுக்கொண்டார்கள்.
எனது ஊரில் உள்ள STP திரையரங்கம், வேல்முருகன் திரையரங்கம் இரண்டிலும் படங்கள் வரவில்லை.
மலைக்கள்ளன், கள்ளன் என மலையாளத்தில் படங்கள் வந்துள்ளன அது வெறும் டைட்டில் மட்டும் தான். கள்வர் என ஏற்கனவே பெயர் இருந்ததால் தான் நான் கள்ளன் என பெயர் வைத்தேன்.
இது பெரிய நடிகரின் படம் இல்லை, நான் உடனே பெயரை மாற்றினால் மக்களுக்கு அது சேராது.
தமிழக முதல்வருக்கு ஒரே ஒரு கோரிக்கை தான் இது பெரியாரின் மண், பெண் பிள்ளைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஆட்சி இது. நீங்கள் தக்க நடவடிக்கை எடுத்து இந்த படத்திற்கு மட்டுமில்லை இனிமேல் வரும் படத்திற்கு ஜாதி பிரச்னை வராமல் பார்த்து கொள்ளுங்கள்.
கரு.பழனியப்பனையும் சேர்த்து தான் சொல்கிறேன், படத்திற்க்கு நீங்களும் ஒத்துழையுங்கள்.
என கண்ணீருடன் வேண்டுகோள்விடுத்தார்.