அப்டேட்டுக்கு மேல் அப்டேட் – விஜய் ரசிகர்கள் உற்சாகம்

தளபதி விஜய் மாபெரும் ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளார். ஆனால் சமீபத்தில் வெளியான பிகில், மாஸ்டர் என இரண்டு படங்களும் வசூல் ரீதியாக வெற்றியடைந்தாலும், நெகடிவ் விமர்சனங்களை தான் பெற்றது. ரசிகர்களுக்கும் பெரும் அதிருப்தி.

தற்போது ‘டாக்டர்’ படத்தை இயக்கி ரசிகர்களின் மத்தியில் அதிகபட்ச எதிர்பார்ப்பை உருவாக்கியவர் இயக்குனர் நெல்சன் திலிப் குமார்.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், நெல்சன் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவான படம் ‘பீஸ்ட்’. இந்த படத்தின் ‘அரபிக் குத்து’ பாடல் சென்ற மாதம் வெளியாகி ரசிகர்களுக்கு விருந்தளித்தது. அதன் பின் எங்கு பார்த்தாலும் ‘ஹலமத்தி ஹபி பூ’ தான்.

இரண்டு தினங்களுக்கு முன்பு பீஸ்ட் படத்தின் இரண்டாம் பாடல் ‘ஜாலி ஓ ஜிம்கானா’ ப்ரோமோ வெளியானது. இந்த பாடலை தளபதி விஜய் பாடியுள்ளார். அந்த ப்ரோமோ வீடியோ 10 மில்லியன் வியூஸை கடந்து நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.

பீஸ்ட் படத்திற்கு பின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தில் ராஜு தயாரிப்பில், வம்சி படிப்பல்லி இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகவிருக்கும் படம் #தளபதி66.

எனவே தளபதி 66 படத்தின் அப்டேட் விரைவில் வரலாம் என சினிமா வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது.

அந்த அப்டேட் தளபதி 66 படத்தின் ஷூட்டிங் துவங்கும் தேதியாக இருக்கலாம் என செய்திகள் வந்தவண்ணம் உள்ளது. அப்படி இருந்தால் ஏப்ரல் மாதம் 1ம் தேதி அன்று துவங்கப்படலாம் என்றும் கூறுகின்றனர்.

இந்த படத்தின் வில்லன் தெலுங்கு நடிகர் நானியாக இருக்கலாம் என்று முன்னதாக செய்திகள் வந்தாலும் இன்று வரை அதிகாரபூர்வமான தகவல்கள் இல்லை.

மேலும் தளபதி விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்கவுள்ளார் என்பது கூடுதல் தகவல்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *