AK 62 படத்தின் இயக்குனர் யார்? – அதிகார பூர்வ வெளியீடு

சமீபத்தில் இயக்குனர் H வினோத் இயக்கித்தில் ஜீ ஸ்டுடியோஸ் தயாரிப்பில், அஜித் குமார், ஹுமா குரேஷி, கார்த்திகேயன் மற்றும் பலர் நடிப்பில் வெளியான படம் ‘வலிமை’.

மிக பெரிய பொருட்செலவில் எடுக்கப்பட்ட இந்த படம் பல விமர்சனங்களுக்கு அடியில் சிக்கிக் கொண்டாலும், 250+ கோடிக்கு மேல் திரையரங்குகள் மூலமாக மட்டும் வசூல் செய்து வசூல் ரீதியான வெற்றி படம் ஆனது.

தற்போது,

அஜித் குமாரின் #AK61 படத்திற்கு இதே கூட்டணி இணைத்துள்ளது. இந்த படத்தின் ஷூட்டிங் மார்ச் 9ம் தேதி ஹைதராபாதில் துவங்கவிருந்து. செட் வேலைகள் இன்னும் முடியாத காரணத்தால் இன்னும் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்படவில்லை.

சமீபத்தில் அஜித் குமாரின் புகைப்படம் இணையத்தளத்தில் வெளியாகி ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் அனைவர்க்கும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

நேற்றைய தினம் நடிகர் அம்பானி சங்கர் அஜித்குமார் உடன் இருக்கும் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்திருந்தார். அந்த பதிவு, அவர் அஜித்தின் 61வது படத்தில் நடிக்கவுள்ளாரா? என்ற கேள்விகளை எழுப்பியுள்ளது.

இந்த நிலையில்,

விக்னேஷ் சிவன் தன் ட்விட்டர் பக்கத்தில் அவர் அஜித் குமாருடன் பல ஆண்டுகளுக்கு முன்பு எடுத்திருந்த ஓரு போட்டோவையும், லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் கடிதத்தையும் இணைத்து பதிவு செய்துள்ளார்.

அந்தக் கடிதத்தில், லைகா நிறுவனம் #AK62 படத்தை தயாரிப்பதில் பெருமைக் கொள்கிறோம். அஜித் குமார் நடிப்பில் உருவாகும் இந்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்குகிறார், அனிருத் இசையாகிறார் படத்தின் முழு பொறுப்பையும் GKM தமிழ் குமரன் கவனித்துக்கொள்வார். படக்குழு பற்றிய கூடுதல் தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் எனவும். AK 62 படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதியில் துவங்கி அடுத்த ஆண்டு வெளியாகும் என்றும் அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

மேலும் விக்னேஷ் சிவன் அந்த பதிவில் ‘எல்லாமே இனிமேல் நல்லாதான் நடக்கும், காணும் கனவெல்லாம் இறைவன் அருளால் பலிக்கும்’.
இந்த வாய்ப்பை தந்த அஜித்குமார் சார் அவர்களுக்கு நன்றி, இந்த மகிழ்ச்சியை வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியவில்லை என்றும் மிகவும் மகிழ்ச்சியாக பதிவு செய்திருந்தார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *