வெளியானது பீஸ்ட் படத்தின் ‘ஜாலி ஓ ஜிம்கானா’

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், தளபதி விஜய், பூஜா ஹெக்டே, ரெடின் கிங்ஸ்லி மற்றும் பலர் நடிப்பில், நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில், அனிருத் இசையில் பிரமாண்டமாய் உருவாகும் படம் ‘பீஸ்ட்’.

ஏப்ரல் மாதம் வெளிவரும் இந்த படத்தின் அப்டேட்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், படத்தின் மீதான ஆர்வத்தையும் அதிகரித்து வருகிறது.

சென்ற மாதம் வெளியான ‘அரபிக் குத்து’ பாடல் செம ஹிட் அடித்தது, அந்த பாடலுக்கு ரசிகர்கள் யூடியூப் ஷார்ட்ஸ், இன்ஸ்டாகிராம் ரீலிஸ் என இணையத்தளம் முழுவதும் ‘ஹலமத்தி ஹபி பூ’ தான். மேலும் இந்த பாடல் 100+ மில்லியன் வியூஸை கடந்து சாதனை படைத்துள்ளது.

இரண்டு நாட்களுக்கு முன்னர் பீஸ்ட் படத்தின் செகண்ட் சிங்கள் ப்ரோமோவை சன் பிக்சர்ஸ் வெளியிட்டது. அந்த ப்ரோமோ ரிலீஸ் செய்த 1 மணி நேரத்தில் அதிகம் பார்க்கப்பட்ட ப்ரோமோ என்ற சாதனையையும் உருவாக்கியது.

இன்று 6 மணிக்கு ‘ஜாலி ஓ ஜிம்கானா’ தளபதி விஜய் பாடிய இந்த பாடலை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிடும் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது அந்த பாடல் வெளியானது.

‘ ஜாலி ஓ ஜிம்கானா’ பாடலை பார்க்க கீழுள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

https://www.youtube.com/watch?v=jmwU1iAC-IE

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *