இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும் (RARA) வெளியீட்டிற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், Amazon Prime Video இப்படத்தின் புதிய பாடலை வெளியிட்டுள்ளது. ஸ்ட்ரீமிங் சேவை மூலம் வெளியிடப்பட்ட இப்பாடல் திரைப்படத்தைப் பற்றிய ஒரு முன்னோட்டத்தை நமக்குத் தருகிறது. காசு என்று தலைப்பில் வே.மதன்குமார் எழுதிய இப்பாடலை பம்பா பாக்யா பாடியுள்ளார் இந்தப் பாடலுக்கு அறிமுக இசையமைப்பாளர் கிரிஷ் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் ரம்யா பாண்டியன், வாணி போஜன், மிதுன் மாணிக்கம் மற்றும் வடிவேல் முருகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இணைப்பு: http://youtu.be/zQ9uMQJxHGc
அரிசில் மூர்த்தி இயக்கிய இத் திரைப்படத்தை, 2D என்டர்டெயின்மென்ட் எனும் தனது பேனரின் கீழ் சூர்யா தயாரித்துள்ளார், RARA செப்டம்பர் 24, 2021 அன்று பிரத்தியேகமாக Amazon Prime Video – இல் வெளியிடப்பட உள்ளது.