கோயம்புத்தூரை சேர்ந்த 22 வயது இளைஞன் தான் TTF வாசன். பைக் சாகசங்கள் செய்தும், அதிவேகமாக பைக் ஓட்டி (MOTO VLOGGING) செய்வதையே வாடிக்கையாக வைத்துள்ள இவர். சமீபத்தில் ரூ.10 லட்சம் மதிப்பிலான நிஞ்ஜா Z900 என்ற அதிவேகமாக செல்லக்கூடிய வண்டியை வாங்கி இளைஞர்களை மேலும் கவர்ந்தார்.
லடாக், நேபால் என பல இடங்களுக்கு பைக் பயணம் செல்லும் இவர். செல்லும் வழியில் சிலருக்கும் உதவி கரம் நீட்டியும், பலரிடம் சண்டைபோட்டு கெத்து காட்டி வந்த இவருக்கு பெரும் சோதனை ஒன்று நிகழ்ந்துள்ளது.
கடந்த ஜூன் 29ம் தேதி TTF வாசன் தனது பிறந்தநாளை மேட்டுப்பாளையம் அருகிலுள்ள அன்னூரில் கொண்டாடினார். அந்த விழாவிற்கு பல்லாயிரக் கணக்கான இளைஞர்கள் வருகை தந்தனர். ஹீரோ-ஹீரோயினை பார்க்க கூட இவ்வளவு கூட்டம் வருமா? என்பது சந்தேகமே. அப்போது, அந்த கூட்டத்தை கண்டு போலீஸ் சிலர் வந்து பேச்சு வார்த்தை நடத்தி TTF வாசனை கூட்டத்தை கலைக்குமாறு கேட்டுக்கொண்டனர். 3 மாதங்களுக்கு முன்பு சென்னையில் TTF வாசன் நடத்திய மீட்-அப்பும் போலீஸ் விசாரணை வரை சென்றது குறிப்பிடத்தக்கது.
கைது செய்ய காரணம்?
மணிக்கு 240 கி.மீ வேகத்தில் பைக்கை இயக்கி இளைஞர்களை தூண்டுதல். போது மக்களுக்கு அச்சுறுத்தும் வகையில் வாகனத்தை இயக்குதல். சாலையில் சாகசம் செய்து பிற வாகன ஓட்டிகளுக்கு இடையூறு செய்யுதல் என பல புகார்களுக்கு ஆளாகியுள்ளார் TTF வாசன். அதி வேகமாக பைக் இயக்குவது சட்டப்படி குற்றம் இல்லை என்றாலும் இளைஞர்களை தூண்டும் வகையில் வீடியோ பதிவு செய்வது பெற்றோர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறது.
இந்த காரணங்களை TTF வாசன் கைது செய்யப்படுவாரா? விளைவுகளை அறிந்து அதற்கேற்றவாறு செயல்படுவாரா? என்பது அவருக்கு தான் வெளிச்சம்.