ரஜினியுடன் இணைந்த லோகேஷ் கனகராஜ்! நெல்சனின் நிலைமை என்ன?

உலகநாயகன் கமல் ஹாசன், விஜய் சேதுபதி, பஹத் பாசில் மற்றும் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகியுள்ள விக்ரம் திரைப்படம் வருகிற ஜூன் 3ம் தேதி திரைக்கு வர இருக்கிறது. மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளியாகஉள்ள இப்படத்திற்கு
டிக்கெட் முன்பதிவு துவங்கிய நிலையில், மிக விரைவாக திரையரங்குகளில் நிரம்பி வருகின்றது.

இது ஒரு புறம் இருக்க, இன்று இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இல்லத்தில் அவரை சந்தித்த தருணங்களை வெளியிட்டது. இணையத்தளத்தில் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.

அவரின் ட்விட்டர் பதிவில் “கமல் சார் மற்றும் ரஜினி சார் இருவர்க்கும் நன்றி! உங்கள் இருவரின் நட்பும் ஊக்கமளிக்கும் ஒன்று. லவ் யு சார்” என்று பதிவிட்டிருந்தார்.

இது குறித்து சினிமா வட்டாரங்கள் தெரிவிப்பதாவது, RKFI நிறுவனம் சார்பில் உலகநாயகனின் தயாரிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் நடிக்கவுள்ளதாகவும், அப்படி இருக்கும் பட்சத்தில் அந்த படத்தின் வேலைகள் வருகிற ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் துவங்கும் என்றும் தெரிவிக்கின்றன.

இச்செய்தி வெறும் வதந்தி என்று தெரிவிக்கும் ஒரு தரப்பினர் ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் #தலைவர்169 என்று பெயரிடப்படாத சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகவிருக்கும் நெல்சன் இயக்கத்திலான படத்தின் படப்பிடிப்பு துவங்கவுள்ளது என்ற தகவல்களும் வந்தவண்ணம் உள்ளது.

ஆனால் RKFI நிறுவனம் சார்பில் சூப்பர் ஸ்டாரை உலகநாயகன் தயாரிக்கவுள்ளார் என்ற தகவல் இதுவரை உறுதி செய்யப்படவில்லை.

எது எப்படியோ, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வந்தாலும் எங்களுக்கு ஓகே! நெல்சன் படம் முதலில் வந்தாலும் ஓகே! எங்களுக்கு தலைவரை திரையில் பார்த்தால் போதும் என்று ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *