விக்ரம் படத்தின் முன்பதிவு என்ன ஆனது தெரியுமா?

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி, பஹத் பாசில் மற்றும் பலருடன் உலக நாயகன் கமல் ஹாசன் நடித்து தயாரித்திருக்கும் படம் “விக்ரம்”. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். இந்த படம் வரும் ஜூன் 3 தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

இந்த படத்தின் பூஜை துவங்கியது முதல் பர்ஸ்ட் லுக், டீஸர், க்ளிப்ம்ஸ் என பல அப்டெட்டுகள் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை உச்சத்திற்கு கொண்டு சென்றது.

மேலும்,நேற்று (28 மே) இப்படத்தின் முன்பதிவு துவங்கியது. இதற்கு முன்னதாகவே புக் மை ஷோ செயலியில் 2 மில்லியன் லைக்குகளை பெற்று சாதனை படைத்த இப்படம். தற்போது, முன்பதிவில் பல திரையரங்கின் இருக்கைகளை விரைவாக நிரப்பி வருகிறது.

விக்ரம் படத்தின் முதல் காட்சி அதிகாலை 4 மணிக்கு இருக்கும் என்று கூறப்பட்டு வரும் நிலையில், இதுவரை சென்னையிலுள்ள எந்த திரையரங்கிலும் 4 மணி காட்சிக்கான முன்பதிவு துவங்கவில்லை என்பது கூடுதல் தகவல்.

எனவே, பான் இந்தியா திரைப்படமாக வெளியாகும் இப்படம் முன்பதிவில் பல சாதனைகளை செய்யுமா? என்று காத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இது ஒரு புறம் இருக்க, விக்ரம் படத்தின் ப்ரோமோஷனுக்காக படகுழுவினர் பல மாநிலங்களுக்கும், பல நாடுகளுக்கும் வெகு சில நாட்களில் சென்று வரவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *