உலக அரங்கில் திரையிடப்படும் தனுஷின் ‘கர்ணன்’ திரைப்படம்!!

இயக்குநர் திரு.மாரி செல்வராஜ் இயக்கத்தில் கலைப்புலி S.தாணு தயாரிப்பில், தனுஷ் நடித்த “கர்ணன்” திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில்  கடந்த ஏப்ரல் 9ஆம்தேதி திரையிடப்பட்டு மிகப்பெரிய வெற்றியையும் வசூல் சாதனையையும் படைத்தது . அது மட்டுமில்லாமல் OTTதளமான AMAZON PRIME-ல் ‘கர்ணன் ’ மிகப்பெரிய வரவேற்பையும் பெற்றது.

கடந்த சுதந்திர தினத்தில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் கர்ணன் திரைப்படம் ஒளிபரப்பாகி கிட்டத்தட்ட 9.4 TRP பெற்று ரசிகர்களை கவர்ந்தது சாதனை படைத்தது.

இதையடுத்து  ‘ஜெர்மனி’ நாட்டில் FRANK FURT நகரில் வருகிற அக்டோபர்  மாதம் 12, 13, 14 தேதிகளில் நடக்கவிருக்கும் NEW GENERATIONS INDEPENDENT INDIAN FILM FESTIVAL 2021-ல் திரையிடப்படுகிறது என்பது தமிழ் சினிமா ரசிகர்களை மகிழ்ச்சியடைய செய்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *